தெங்கம் புதூர் அரசுப் பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்றிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
27 May 2026, 10:43 pm
<p><strong>தெங்கம் புதூர் அரசுப் பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்றிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில்,மே,27- தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை (எண்4847)யை மூட வலியுறுத்தி தெங்கம் புதூர் சந்திப்பில் சிபிஐ எம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஜெபமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரேசன், மிக்கேல் நாயகி, சிவகோபன் ஆகியோர் விளக்கி பேசினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர். இதில், இந்த மதுக்கடையால் பள்ளி மாணவிகள் நிம்மதியாக பள்ளி சென்று வர முடியவில்லை. பொதுமக்களும் அந்த பாதையை அதிகமாக பயன்படுத்துவதால் பெண்கள் பயந்து பயந்து செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதியும் பள்ளி மாணவ மாணவியரின் நலன் கருதியும் உடனடி யாக இந்த கடையை அகற்ற வேண்டும். இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் பேசினார்.</p>
