அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் விறகுக் கட்டுகளைத் தலையில் சுமந்து போராட்டம்
4 Nov 2026, 10:41 pm

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் விறகுக் கட்டுகளைத் தலையில் சுமந்து போராட்டம்

தூத்துக்குடி,நவ.4- ஏழை எளிய மக்களை பாதிக்கும் அரிசி , பருப்பு, சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலைகளை உயர்த்திய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் படுகொலைகளை தடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றியக் குழு சார்பில் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜேசுமணி ஆகியோர் பேசினர்.

திருச்செந்தூர் ஒன்றியக் குழு சார்பில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஆத்திமுத்து தலைமை வகித்தார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெபஸ்டின் ராஜ் ,மூத்த தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.

கருங்குளம் ஓன்றியக்குழு செயலாளர் செ.சுபா தலைமையில் செய்துங்கநல்லூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தேரழர் தி.சீனிவாசன் மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் பேசினர்.

கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் ,ஒன்றியச்செயலாளர் மணி, மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

உடன்குடியில் மாலை அணிவித்து விறகு கட்டுகளை தலையில் சுமந்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. உடன்குடி நகரச்செயலாளர் சங்கர் தலைமை வகித்தார் மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில், ஒன்றியச் செயலாளர் பா.கந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.