தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடியில் தொடரும் படுகொலைகளைத் தடுத்திடுக; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

3 Nov 2026, 10:16 pm
தூத்துக்குடியில் தொடரும் படுகொலைகளைத் தடுத்திடுக; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக!  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>தூத்துக்குடியில் தொடரும் படுகொலைகளைத் தடுத்திடுக; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி,நவ.3-தூத்துக்குடியில் தொடரும் படுகொலைகளைத் தடுக்கக்கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும்அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொடூரமான முறையில்கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.</p><p>மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையும், மாவட்டநிர்வாகமும் இத்தகைய குற்றச் சம்பவங்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொலை, வன்முறை, ரவுடியிசம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து ஆகியோர் உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் மாநகரக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.