தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டணம் வசூலித்து குற்றாலம் சுற்றுலாவை முடக்குவதா? வனத்துறையைக் கண்டித்து தென்காசி ஆட்சியரகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் குளிக்கும் போராட்டம்

27 May 2026, 10:49 pm
கட்டணம் வசூலித்து குற்றாலம் சுற்றுலாவை முடக்குவதா? வனத்துறையைக் கண்டித்து தென்காசி ஆட்சியரகம் முன்பு  மார்க்சிஸ்ட் கட்சியினர் குளிக்கும் போராட்டம்
<p><strong>கட்டணம் வசூலித்து குற்றாலம் சுற்றுலாவை முடக்குவதா? வனத்துறையைக் கண்டித்து தென்காசி ஆட்சியரகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் குளிக்கும் போராட்டம்</strong></p><p>தென்காசி, மே 27- நூற்றாண்டு பாரம்பரியமிக்க குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைத்து வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்து சுற்றுலாவை முடக்கும் வனத்துறையைக் கண்டித்தும் கட்டண வசூலை திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதனப் போராட்டம் புதனன்று நடைபெற்றது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி என அருவிகள் உள்ளன. தற்போது இந்த அருவிகளில் குளிக்க கட்டணம் வசூல் செய்யப்படும் என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீசன் தொடங்கிய நிலையில் இன்னும் பொதுமக்களை குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இத்தகைய போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குளிக்கும் போராட்டம் நடைபெற்றது. குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு ரூ.20 கட்டணம் வசூல் செய்யும் முறையை வனத்துறை நிர்வாகம் கைவிடவேண்டும். தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டண வசூலை தடுத்து நிறுத்திட வேண்டும். சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது. செண்பகாதேவி அருவியின் அருகில் உள்ள செண்பகா தேவி அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதற்கட்டமாக குளிப்பதற்கு ரூ.20 கட்டணம் வசூல் செய்யும் முறை இருக்காது என கூறியுள்ளார். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகி டேனியல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கம், கணபதி, அயுப்கான், குணசீலன், வேலுமயில், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், லெனின், தென்காசி வட்டார செயலாளர் பட்டாபிராமன், வட்டார குழு உறுப்பினர் அய்யப்பன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.