தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்டவாய்த்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் வெற்றி பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்க அதிகாரிகள் ஒப்புதல்

17 Jul 2026, 8:35 pm
பெட்டவாய்த்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் வெற்றி பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்க அதிகாரிகள் ஒப்புதல்
<p><strong>பெட்டவாய்த்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் வெற்றி பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்க அதிகாரிகள் ஒப்புதல்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜூலை 17- திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதி யில் பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 14 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தலைமையில் வியாழ னன்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. இக்கூட்டத்தில் நெடுஞ்சா லைத்துறை, மருத்துவத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதைத் தொட ர்ந்து போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பேச்சுவார்த்தையில், திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்படும். மேலும், சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பெட்டவாய்த்தலை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கும் வகை யில், காலியாக இருந்த மருத்து வர் மற்றும் செவிலியர் பணி யிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. வரும் திங்கட்கிழமை முதல் மூன்று சுழற்சி (ஷிப்ட்) முறையில் மருத்து வர்கள் மற்றும் மருத்துவப் பணி யாளர்கள் பணியமர்த்தப்பட்டு, 24 மணி நேர சிகிச்சை சேவை தடை யின்றி வழங்கப்படும் என்று மருத்து வத்துறை அதிகாரிகள் உறுதியளித் தனர். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் அதிகாரிகளால் எழுத்து ப்பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. பேச்சு வார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ரவிச் சந்திரன், கிளைச் செயலாளர் ரங்க நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.