மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி…27 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கல்
29 Sept 2026, 1:27 am

மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி…27 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கல்

நாமக்கல், செப்.28-எலச்சிபாளையம் அருகே இலுப்பிலி கிராமம் குளத்துவளவு மக்களுக்கு 27 வீட்டு மனை இலவச பட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள, எலச்சிபாளையம் இலுப்பிலி கிராமம் குளத்துவளவு அருகில் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. இதில் கடந்த சில வருடங்களாகவே அதிக மழை நீர் தேங்கி நிற்பதால் ஏரியின் அருகில் குடியிருந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து வீடுகள் இடிந்து குடியிருக்க முடியாமல் பெரும் சிரமத்தை இப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர். மழை காலங்களில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு இவ்வூர் இளைஞர்கள் உட்பட பலர் வெளியூர்களில் குடியேறும் நிலைமை ஏற்பட்டது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு அதிகாரிகளுக்கு கடந்த சில வருடங்களாகவே கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த டிசம்பர் மாதம் முதல் உண்ணாநிலைப் போராட்டம், ஆர்ப்பாட்டம், காத்திருக்கும் போராட்டம், ஆற்றில் இறங்கி போராட்டம், பட்டை நாமம் போட்டுக்கொண்டுஅரை நிர்

வாணப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியதின் அடிப்படையில் திருச்செங்கோடு வட்டாட்சியர் ராஜா இரண்டு மாதங்களில் பட்டா வழங்குவதாக உறுதியளித்து எழுத்து பூர்வமாக வழங்கினார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பட்டா பெற்றுதருவதற்கு முன்நின்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு வந்தனர். இதனையடுத்து திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் லெனின் வட்டாட்சியர் ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட குளத்துவளவு மக்களுக்கு 27 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவழங்கி மாற்று இடம் காண்பித்துள்ளனர்.இதனை பெற்றுக் கொண்ட ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக் குழுஅலுவலகத்திற்கு நேரில் வந்து நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக நடைபெற்ற அறிவிப்பு கூட்டத்திற்கு சிபிஎம் மாரப்பம்பாளையம் கிளைச் செயலாளர் எம். தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் மற்றும் கிளை செயலாளர் எம்.லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.