தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக; தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறுக!

19 Jun 2026, 10:04 pm
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக; தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறுக!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக; தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறுக!

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 19- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலன்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக ஒன்றிய அரசு நடவடிக்கையை கைவிட வேண்டும், மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியான பொதுமக்களுக்கும் முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர சிபிஎம் செயலாளர் எஸ்.அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர் டி.மனோகர ஜஸ்டர்ஸ் ,பேராசிரியர் டி.நாகராஜன், மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார்.

மெதுகும்மல் ,அடைக்காக்குழி, கொல்லங்கோடு வட்டாரக்குழுக்கள் சார்பில் நடைக்காவு ஐ ஒ பி வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் தலைமை வகித்தார் . அடைக்காகுழி வட்டார செயலாளர் ரெஜி துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மேரிஸ்டெல்லா பாய் ,மெதுகும்மல் வட்டாரக்குழு உறுப்பினர் லாறன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மெதுகும்மல் வட்டார செயலாளர் தங்கமணி முடித்து வைத்துப்பேசினார்.

திருவட்டாரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சி. ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். சகாய ஆன்றனி, விஸ்வம்பரன், வில்சன், ரவி ஆகியோர் பேசினர். தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்மின் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஆர். லீமாறோஸ் .வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் விஷ்ணு ஆகியோர் பேசினர்.

அருமனை வட்டாரக்குழு சார்பில் அருமனை நெடுங்குளம் சந்திப்பில் வட்டாரச் செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்பபாட்டம் நடைபெற்றது. முழுக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் மரிய செல்வி விலாசினி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் உறுப்பினர் எம். அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.

மார்த்தாண்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த சேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலாம்பரன் ,மாவட்ட குழு உறுப்பினர் மோகன் குமார் ,ஜூலியட் மெர்லின் ரூட் ,வட்டாரச் செயலாளர்கள் ஜஸ்டின் சர்தார் ஷா ,சங்கர் ஆகியோர் பேசினர். மேல்புறம் சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார செயலாளர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வின்சென்ட், பாகோடு பேரூராட்சி தலைவர் ஆர். ஜெயராஜ் ஆகியோர் பேசினர். கிள்ளியூர் வட்டார கமிட்டிகள் சார்பாக கருங்கல் தபால்நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன் தலைமை தாங்கினார். கிழக்கு வட்டார செயலாளர் ராஜா, மேற்கு வட்டார செயலாளர் கிறிசாந்து மேரி ,மாவட்ட குழு உறுப்பினர் சகாயபாபுஆகியோர் பேசினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நூர்முகமது முடித்து வைத்து பேசினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரில் விவிடி சிக்னல் அருகே சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் எஸ். நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பொருளாதாரக் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து ஆகியோர் விளக்கி உரையாற்றினர். மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

கயத்தாறு ஒன்றியம், கயத்தாறு பேரூர் மெயின் பஜாரில் ஒன்றிய செயலாளர் எம். சாலமன் ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீனி பாண்டியன், ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ் விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி நகர குழு சார்பில் பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சீனிவாசன், நகர குழு உறுப்பினர்கள் முருகன், தினேஷ் குமார் ஆகியோர் பேசினர். திருச்செந்தூர் ஒன்றிய குழு சார்பாக திருச்செந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஜெபஸ்டின் ராஜ் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பூமியில் கண்டன உரையாற்றினார்.

முத்தையாபுரம் பல்க் பஜாரில் புறநகர் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் செயலாளர் ஆ. முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல் கண்டன உரையாற்றினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை டவுணில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாகுழு உறுப்பினர் எல்.சரவண பெருமாள் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் எஸ்.கே.செந்தில் தொடங்கி வைத்து பேசினார், மாவட்ட குழு உறுப்பினர் துரை நாராயணன் பேசினார், மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம் கண்டன உரையாற்றினார். பாளையங்கோட்டை யில் மாவட்ட குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் டி.காமராஜ், கு பழனி ஆகியோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.