அதிகாரிகள் கோரிக்கைகளை ஏற்றதால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் ஒத்திவைப்பு!
16 Jul 2026, 10:14 pm
<p><strong>அதிகாரிகள் கோரிக்கைகளை ஏற்றதால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் ஒத்திவைப்பு!</strong></p><p>திருப்பூர், ஜூலை 16 – தாராபுரம் வட்டம், சோமனூத்து பகுதியில் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று காலை அறி விக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் அதி காரிகள் கொடுத்த உத்தரவாதத்தை அடுத்து தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சோமனூத்து பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பேருந்து வசதி, பட்டா மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் மறியல் போராட்டத் திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போராட்டம் துவங்க இருந்த நிலையில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொலை பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, உடனடியாக சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, சோமனூத்து பகுதிக்கு இன் னும் ஒரு வார காலத்திற்குள் பேருந்து போக்கு வரத்து முறைப்படி துவக்கப்படும். இப்பகுதியின் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்திற்குள் முழுமை யாக தீர்த்து வைக்கப்படும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்கும் பிரச்சனை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் தீர்க்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகள் தரப்பில் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு காலக்கெடுவுடன் கூடிய உறுதி அளித் ததை தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த சாலை மறி யல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில், இந்த மறியல் போராட்டத்தின் நோக்கங்கள் குறித் தும், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை யின் வெற்றிகரமான முடிவுகள் குறித்தும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர். மதுசூதன் விரிவாக பேசினார். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.பவித்ராதேவி, மாவட்டக்குழு உறுப் பினர் என்.கனகராஜ், தாலுகா குழு ஒருங்கிணைப்பா ளர் ஆர்.வெங்கட்ராமன், கிளைச் செயலாளர் மனோ கரன், பேரூராட்சி கவுன்சிலர் மகுடீஸ்வரி மற்றும் முத்துச்சாமி, ரஞ்சித் உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பொது மக்களும், பெண்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
