பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
20 Jun 2026, 12:03 am
<p><strong>பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, பண்ருட்டியிலும் கட்சி சார்பில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் உதயகுமார், நகரச் செயலாளர் தேவராஜுலு, மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.</p>
