விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கள்ளக்குறிச்சியில் 11 மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
8 hours before

விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கள்ளக்குறிச்சியில் 11 மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, நவ. 3-அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க

வலியுறுத்தி, சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருக்கோவி லூரில் வட்டச் செய லாளர் எம்.ஏழுமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் வட்டச் செயலாளர் பி.மணி தலைமையில்,நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு பி.சுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் வட்டச் செயலாளர் பி.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சின்னசேலத்தில் வட்ட செயலாளர் மாரிமுத்து, சங்கராபுரத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி, கல்வராயன்மலையில் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாணாபுரம் கூட்ரோடில் ஒன்றிய செயலாளர் வை.பழனி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எலவனாசூர்கோட்டை யில் ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஏ. வி.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

களமருதூரில் ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேந்தநாட்டில் ஒன்றிய செயலாளர் ஜெ ஜெயக்குமார் தலை

மையில் நடந்த ஆர்ப்பாட்ட த்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.அலமேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எம்.குன்னத்தூரில் ஒன்றிய செயலாளர் வேலா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதிலும் ஏராளமானார் கலந்து கொண்டனர்.