முந்தய பக்கம்

ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

19 Jun 2026, 11:57 pm
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஓசூர், ஜூன் 19- மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், அத்தியாவசியப் பொருட்க ளின் கடும் விலை உயர்வு, தொழிலாளர் நலனைச் சிதைக்கும் 4 சட்டத் தொகுப்புகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, ஓசூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் நாகேஷ்பாபு தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் தேவராஜ், சூளகிரி வட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு, மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்தும், போராட்டத்தின் அவசியத்தைக் குறித்தும் விளக்கிப் பேசினார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் மகாலிங்கம், ஸ்ரீதர், ஜேம்ஸ், ஆஞ்சலா மேரி மற்றும் மாநகர, ஒன்றியக் குழு உறுப்பினர்களான பி.ஜி.மூர்த்தி, எம்.எம்.ராஜூ, ரவி, உதயபாரதி, சந்திரசேகர், திம்மாரெட்டி, அந்தோணிசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram