மேகதாது-வில் அணை கட்டுவதை கைவிடக்கோரி ஒகேனக்கலில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
22 Jul 2026, 10:48 pm
<p><strong>மேகதாது-வில் அணை கட்டுவதை கைவிடக்கோரி ஒகேனக்கலில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 22- மேகதாது பகுதியில் அணை கட்டுவதை கைவிட்டு, காவிரி ஆற் றில் தண்ணீர் திறந்துவிட வலியு றுத்தி ஒகேனக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் தொடர்ந்து நீர்வ ரத்து குறைந்து வருகிறது. கர்நா டகாவில் கடும் மழை பெய்யும் காலங்களில் 3 லட்சம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் பெருக்கெ டுத்து ஓடி கடலில் கலக்கிறது. ஆனால், வறட்சி நிலவும் சமயங்க ளில் அணைகளில் தேக்கி வைக்கப் பட்டுள்ள நீரை திறந்துவிட கர்நாடக அரசு முன்வருவதில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காவிரி நீரை குடிநீருக்காக நம்பி யுள்ள 22 மாவட்டங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகே னக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கானல் நீராகிப்போய்விடும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து குறைவு காரணமாக ஒகேனக்கலி லுள்ள சிறு கடைகளுக்குக்கூட தின சரி தண்ணீர் விநியோகிக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வ ரத்து இல்லாததால், சுற்றுலாப் பய ணிகள் வருகை பெருமளவு குறைந்து விட்டது. இதனால் பரிசல் ஓட்டி கள், சமையல்காரர்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணை யத்தின் விதிகளின்படி ஜூன் மாதம் 9.91 டிஎம் சி, ஜூலை மாதம் 32 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி காவிரியில் தண் ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. வறட்சி காலங்க ளில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில் கர்நாடக அரசின் பிடிவாதம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை வாரிய ஆணையத்தின் முடிவுக் கும் எதிரானது. எனவே, காவிரி யில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்தியும், மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற் சியை கைவிட வேண்டும். ஒகேனக் கல் சுற்றுலாத் தலத்திலுள்ள பரி சல் ஓட்டிகள் மற்றும் சமையல் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்க லில் புதனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பி.பெருமாள், ஏ.குமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வி.மாதன், சி.நாகராசன், சோ. அருச்சுனன், வே.விஸ்வநாதன், ஜி. சக்திவேல், இடைக்குழு செயலா ளர்கள் ஆ.ஜீவானந்தம் (பென்னா கரம் மேற்கு), பி.ஆர்.செல்வம் (பென்னாகரம் நகரம்), எம்.தங்க ராசு (ஏரியூர்), ஆர்.சக்திவேல் (பாப்பிரெட்டிப்பட்டி), அ.ஜெயா (தருமபுரி நகரம்), கே. கோவிந்த சாமி (தருமபுரி ஒன்றியம்), சி.சேகர் (இண்டூர்) மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளா னோர் பங்கேற்றனர்.</p>
