தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசு போக்கை மாற்றாவிட்டால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி கடுமையாக இருக்கும்

28 May 2026, 9:25 pm
ஒன்றிய பாஜக அரசு போக்கை மாற்றாவிட்டால்  மார்க்சிஸ்டுகளின் பதிலடி கடுமையாக இருக்கும்

ஒன்றிய பாஜக அரசு போக்கை மாற்றாவிட்டால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி கடுமையாக இருக்கும்

ஈரோடு ஆர்ப்பாட்டத்தில் பெ. சண்முகம் எச்சரிக்கை

ஈரோடு, மே 28 - ஒன்றிய பாஜக அரசு தனது எதேச்சதிகாரப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிலடி கடுமையாக இருக்கும் என்று கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

கேரள முன்னாள் முத லமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோ தனை நடத்தியதைக் கண்டித்தும், தில்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் வலுக் கட்டாயமாக கைது செய்யப்பட்ட தைக் கண்டித்தும் தமிழகம் முழு வதும் கடந்த இரண்டு நாட்களாக மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேசம் மிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் மீது விமர்சனம்

வியாழனன்று ஈரோடு ஜவான் பவன் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். ரகு ராமன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், கேரள மாநிலத்தில் புதிதாகப் பொறுப் பேற்றுள்ள முதலமைச்சர், முதல் நாள் பிரதமரைச் சந்தித்த நிலையில், மறுநாளே பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடத்தப் பட்டதைச் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி, ‘ஏன் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடத்த வில்லை? உங்களுக்கும் அவர் களுக்கும் கள்ளக்கூட்டு இருக் கிறது’ என்று சிறுபிள்ளைத்தன மாகப் பிரச்சாரம் செய்ததாக சண்முகம் விமர்சித்தார். ‘நுண லும் தன் வாயால் கெடும்’ என்ப தற்கு ராகுல் காந்தியே மிகச்சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவின் வகுப்புவாத, மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வரு வதாகத் தெரிவித்த அவர், ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி வகுப்பு வாதத்தை சமரசமின்றி எதிர்க்கும் மார்க்சிஸ்ட் தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்பதால்தான், அவரை யாரும் தலைவராக ஏற்க மறுக் கிறார்கள் என்றார்.

காவல் நிலையம் போல மாறிய அமலாக்கத்துறை

தொடர்ந்து பேசிய பெ.சண் முகம், அமலாக்கத்துறை என்பது தற்பொழுது உள்ளூர் காவல் நிலையம் போல மாறிவிட்ட தாகக் சாடினார். அரசியல் பழி வாங்கலுக்காக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை அமி த்ஷாவும், நரேந்திர மோடியும் வாடிக்கையாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், மாநில முதலமைச்சர் களைச் சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டுவது எந்த வகையிலான ஜனநாயகம் என்ற கேள்வியை எழுப்பினார். இத்த கைய எதேச்சதிகார நடவடிக்கை க்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், கெஜ்ரி வால், தேஜஸ்வி ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி னார். அதேநேரம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் யாரும் இதைக் கண்டிக்கவில்லை என் றும், தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச் சர் தில்லியில் இருப்பதால் ஒருவேளை கண்டிக்க வில்லையா அல்லது இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டப்படியா னது என்று கருதுகிறாரா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

தூய்மையான நிர்வாகத்தை நடத்திய மார்க்சிஸ்டுகள்

அமலாக்கப் பிரிவின் சோத னையின் முடிவில், ‘எதையும் கைப்பற்றவில்லை’ என்று அம லாக்கத்துறையினர் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ள தை பெ. சண்முகம் சுட்டிக்காட்டி னார். ஏற்கெனவே பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட தங்கம் கடத்தல் வழக்கை, ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அவர் எடுத்துரைத்தார். 1952-இல் இ.எம்.எஸ். நம்பூதி ரிபாட் தொடங்கி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, மாணிக் சர்க்கார், பினராயி விஜயன் வரை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதி நிதிகள் பொறுப்பில் இருந்துள்ள தை அவர் பட்டியலிட்டார். யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடி யாத அளவிற்குத் தூய்மையான நிர்வாகத்தை நடத்தியவர்கள் மார்க்சிஸ்டுகள் என்பதைப் பெருமையோடு குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தார். அத்தகைய கட்சியின் தலைவர்களைச் சோ தனை என்ற பெயரில் இழிவுபடு த்துவது அநாகரிகமானது என்று அவர் கண்டனம் தெரிவித்தார். அதிகார ஆணவத்தில் மார்க் சிஸ்டுகள் மீது நடத்தப்படும் இத்த கைய கொடூரத் தாக்குதலை ஒன்றிய பாஜக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநி லக்குழு உறுப்பினர் வீ. அமிர்த லிங்கம் மற்றும் மாவட்டச் செயற் குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆரோக்கிய அரசியல் அல்ல

முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய பெ. சண்முகம், தேர்ந் தெடுக்கப்பட்ட 20 நாட்களுக் குள் அதிமுக சட்டமன்ற உறுப் பினர்கள் ராஜினாமா செய்திருப் பது வாக்களித்த மக்களை அவ மானப்படுத்தும் செயல் என்று சாடினார். மக்களின் உணர்வு களுக்கு விரோதமாகச் செயல்பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி யில் அவர்கள் இணைந்திருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட அவர், தலைமைச் செயலகத்தை யும் அரசு அலுவலகங்களையும் கட்சிப் பணிகளுக்குப் பயன்படு த்துவது தவறானது என்றும் தெரி வித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.