தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் அவலங்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு

50 minutes before
கோவை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் அவலங்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு

கோவை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் அவலங்கள்

மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு

கோவை, அக். 13- குடிநீர் தட்டுப்பாடு, சீரற்ற சாலைகள், எரியாத தெருவிளக்குகள் மற்றும் சுகாதாரச்சீரழிவு என கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படைப் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடப்பதை அம்பலப்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதேபோல குப்பைகள் நிறைந்துதூர்வாரப்படாமல் உள்ள வடிகால்களாலும், மூடிகளற்ற ஆபத்தான திறந்தவெளி சாக்கடைகளாலும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தெருக்களில் தேங்கும் குப்பைகளால் டெங்கு, மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பெண்கள் நடமாட அஞ்சும் சூழல் நிலவுகிறது. செடிகள் மண்டி, துருப்பிடித்த உடற்பயிற்சிக் கருவிகளுடன் பூங்காக்கள் முடங்கிக் கிடக்கின்றன. சமுதாயக்கூடம், ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், தடையற்ற குடிநீர் வசதி என்பன மாநகராட்சி முழுவதும் காணப்படுகின்றன.

மேலும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களை கூடுதலாக நியமித்துப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் மீது ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எச்சரித்தனர்.முன்னதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழுத் தலைவர் வி.இராமமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு, என்.சுமதி 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு பகுதிவாரியாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான அவதிகளை விவரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜாவிடம் அளித்தனர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.