வீடுகளை இழந்த மக்களுக்கு இலவச அடுக்குமாடி குடியிருப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
yesterday
<p><strong>வீடுகளை இழந்த மக்களுக்கு இலவச அடுக்குமாடி குடியிருப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p><p>சிதம்பரம், நவ 17-சிதம்பரம் நகரம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடி யிருப்புகளில் இலவசமாக வீடுகள் வழங்க வேண்டும், நகர்ப்புறங்களில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், நகரம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும், இந்திரா நகர் பகுதியில் தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>கட்சியின் நகரச் செயலாளர் எஸ். ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா மற்றும் ஜெயசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.</p>
