தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புவனகிரியில் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

30 Oct 2026, 11:42 pm
புவனகிரியில் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரியில் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரி, அக்.30-புவனகிரி வட்டத்திற்குட்பட்ட பெரிய குமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, நேந்திரக்கிள்ளை, ஆதிவராகநல்லூர், வல்லம் உள்ளிட்ட 9 கிராமங்களில் வீட்டுமனை பட்டா இல்லாமல் வசித்து வரும்பொதுமக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் அம்சையாள், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஜெயசீலன், ஹசன் முகமது, ராமானுஜம், வாசுதேவன், விமலா, ஜீவா, கிளைச் செயலாளர்கள் அஞ்சம்மாள், வெங்கடேசன், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குடிமனை பட்டா இல்லாத குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து புவனகிரி வட்டாட்சியர் ஷனாஸை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், தகுதி யுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து

வீட்டுமனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.