தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமானிய மக்களை வதைக்கும் ஒன்றிய அரசு: சிபிஎம் ஆவேசம்

19 Jun 2026, 10:49 pm
சமானிய மக்களை வதைக்கும் ஒன்றிய அரசு: சிபிஎம் ஆவேசம்

சமானிய மக்களை வதைக்கும் ஒன்றிய அரசு: சிபிஎம் ஆவேசம்

தருமபுரி, ஜூன் 19- பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை களை உயர்த்தி, சாமானிய மக்களை வதைக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சி.நாகராசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அரூரில் ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவா னந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார் கண்டனவுரையாற்றி னார். ஏரியூரில் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கராஜ், பாலக்கோட்டில் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ், கடமடை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மாவட்டக்குழு உறுப்பினர் பி.சக்கர வேல், பென்னாகரத்தில் நகரச் செயலா ளர் செல்வம், இண்டூரில் பகுதிக்குழு செயலாளர் சேகர், பாப்பாரப்பட்டியில் பகுதிக்குழு செயலாளர் சக்திவேல், நல்லம்பள்ளியில் ஒன்றியச் செயலா ளர் எஸ்.எஸ்.சின்னராஜ், பாப்பிரெட்டிப் பட்டியில் வட்டச் செயலாளர் தி.வ.தனு சன் ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.மாதன், எம்.முத்து, வே.விஸ்வநாதன், சோ.அருச்சுணன், ஆர்.மல்லிகா, ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.நவீன் சந்திரன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆஷரா, எல்.சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தாலுகாகுழு உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.

சேலம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இரண்டு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, எரிபொருள் விலை உயர்விற்கெதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் வி.வெங்க டேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன், வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூரில் தாலுகா செய லாளர் ஏ.முருகேசன் தலைமையில், பச்சை காய்கறிகளை சாப்பிட்டு, ஒன் றிய அரசிற்கெதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஓமலூரில் தாலுகா செயலாளர் கே.சேகர், மேட்டூரில் ஒன்றி யச் செயலாளர் எஸ்.வசந்தி, வாழப்பாடி யில் கே.கணேசன், எடப்பாடியில் தாலுகா செயலாளர் நடராஜ், கொங்க ணாபுரம் ஒன்றியச் செயலாளர் முத்து சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. இளங்கோ, எஸ்.எம்.தேவி, ஜி.கணபதி, தாலுகா செயலாளர் ஜி.பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தாலு காக்குழு உறுப்பினர் கே.சி.ரங்கசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரி முத்து, தாலுகா செயலாளர் க.பெரு மாள், சிஐடியு மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். காடட்டியில் இடைக் கமிட்டி உறுப்பினர் எம்.மாதேவப்பா, கரளயத்தில் தாலுகாக்குழு உறுப்பி னர் கே.ராஜேந்திரன், குன்றியில் பி.சிவ ராஜ், கடம்பூரில் குப்புசாமி, ஈஞ்சம் பள்ளி ஊராட்சி அலுவலகம் முன்பு மூத்த தோழர் க.சொங்கப்பன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, கே. மாரப்பன், சி.முருகேசன் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். ஈரோடு ஜவான்பவன் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.கோமதி உள்ளிட்டோர் பங் கேற்றனர். பெருந்துறையில் தாலுகா செயலாளர் ஆர்.அர்ச்சுணன், சத்திய மங்கலத்தில் ஏ.சகாதேவன், புஞ்சை புளியம்பட்டியில் ஒன்றியக்குழு உறுப் பினர் ரமேஷ், பவானியில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மூத்த தோழர் எஸ்.முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணியன், பி.பி.பழனிசாமி, ஒன்றியச் செயலாளர் டி.சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோபிசெட்டிபாளையத் தில் தாலுகா செயலாளர் க.பெரு மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாதர் சங்க தாலுகா செயலாளர் மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாநகரக்குழு உறுப்பினர் பொம் முதுரை தலைமை ஏற்றார். இதில், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள் ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாந கரக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை ஏற்றார். இதில், வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரரா சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் உள்ளிட் டோர் உரையாற்றினர். வேலம்பாளை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஆறுமுகம் தலைமை ஏற்றார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், நகரச் செயலாளர் ச.நந்த கோபால் உள்ளிட்டோர் உரையாற்றி னர். காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் ஆர்.வின் சென்ட் தலைமை ஏற்றார். ஊத்துக் குளியில் கிளைச் செயலாளர் பா.சின்ன சாமி தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் சரஸ்வதி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.கந்தசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். பல்ல டத்தில், ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். பொங்கலூர் ஒன்றியத் தில், ஒன்றிய குழு உறுப்பினர் எல். துரை முருகன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர். பாலன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.சுந்தரம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஆர். வெங்கட்ராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவிநாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றி யக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை நக ராட்சி அலுவலகம் முன்பு நகரச் செய லாளர் தண்டபாணி, ஜல்லிபட்டி நால் ரோடு பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பி னர் மாசணம், மடத்துக்குளம் பெதபம் பட்டி நால் ரோடு பகுதியில் ராஜகோ பால் ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மது சூதனன், கனகராஜ், தாலுகா செயலா ளர் வடிவேல், ஒன்றியச் செயலாளர் கள் சசிகலா, ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

மேட்டுப்பாளையத்தில் சிபிஎம் தாலூகா செயலாளர் கனகராஜ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை, சௌரிபாளையத்தில் சிபிஎம் கிளைச் செயலாளர் சக்திவேல், புலிய குளத்தில் நகரக்குழு உறுப்பினர் டி.நாக ராஜ், காந்தி பார்க் பகுதியில் நகரச் செயலாளர் பி.சி.முருகன், தொண்டா முத்தூரில் கிளைச் செயலாளர் பி.எம்.சாமிநாதன், மலுமிச்சம்பட்டியில் ஒன்றி யக்குழு உறுப்பினர் எம்.மணி, ஆனை மலையில் தாலுகா செயலாளர் எம்.கன கராஜ், பொள்ளாச்சியில் தாலுகாக் குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுரேஷ், வி.ஆர்.பழனிசாமி, கே.எஸ்.கனகராஜ், என்.ஆறுச்சாமி, வி.இராம மூர்த்தி, இடைக்கமிட்டி செயலாளர் கள் ஆர்.மூர்த்தி, எம்.பஞ்சலிங்கம், மூ. அன்பரசன், வி.மணி, என்.சுபாஷ், சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன், டி.பாலன் நினைவு இன்ஜினிய ரிங் சங்க பொதுச்செயலாளர் கே.மாரி முத்து, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நரசிம்மநாயக் கன்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், கட்சியின் மூத்த தலைவ ரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான யு.கே.வெள்ளிங்கிரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்கு மார், ஒன்றியச் செயலாளர் கோபால கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பி னர் என்.சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளர் பெ.அறிவு டைநம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, நகரச் செயலாளர் சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோட்டில் நகரக்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, பள்ளிபாளையத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சரவணன், கொல்லி மலையில் தாலுகா செயலாளர் எஸ்.தங்கராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூத்த தோழர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, எம்.கணேஷ் பாண்டியன், எம்.அசோகன், ஏ.டி.கண்ணன், நகரச் செயலாளர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் எம்.லட்சுமணன், மலை வாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.மாணிக்கம், தமிழ்நாடு காபி விவசாய சங்க மாநில துணைச்செய லாளர் சி.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.