மோடி அரசே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
16 May 2026, 10:21 pm

மோடி அரசே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 16- பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 14 காசுகள், டீசல் விலை 3 ரூபாய் 11 காசுகள், ஆட்டோக்க ளுக்கான சிஎன்ஜி கேஸ் கிலோவுக்கு 2 ரூபாய் என ஒன்றிய பாஜக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய் யக் கோரி சனிக்கிழமையன்று (மே 16) சென்னை தரமணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கி னார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், ஜி. செந்தில் குமார், டி.சுந்தர், எம். தாமு, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ். முகமது ரஃபி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கண்டன உரை யாற்றினார்.

குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுக்கவே தவெக-வை ஆதரித்தோம்

தரமணி ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பெ.சண்முகம் பதிலளித் தார். அப்போது, அவர் கூறியதாவது: “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் இருந்து தவெக-விற்கு சிபிஎம் ஆதரவு அளிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், தனிப்பெருங்கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வாய்ப்பு தவெக-வுக்குத் தான் இருந்தது.

அவ்வாறு இல்லாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கும். பாஜக கொல்லைப்புறமாக தமிழகத்தை ஆளும் அவல நிலை ஏற்பட்டி ருக்கும். அத்தகைய அவலத்தை, தவெகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சி கள் தடுத்து நிறுத்தி உள்ளோம். குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவும், மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசு இருக்க வேண்டும், மக்களுடைய தீர்ப்புக்கு விரோதமாக வேறொரு ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்களை ஆலோசித்துத் தான் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளோம்.

தவெக தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவர் (ஜோசப் விஜய்) நல்லாட்சியைக் கொடுப்பதாக சொல்லியுள்ளார். அதற்கேற்ப அந்த ஆட்சி அமைய வேண்டும், அதைப் பொறுத்து ஆத ரவைத் தொடர்வதா, இல்லையா என் பதை முடிவு செய்வோம்” என்றார்.

புயலில் சிக்கிய படகு போல மாறிய மக்களின் வாழ்க்கை! சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் வேதனை

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கை புயலில் சிக்கிய படகுபோல மாறிவிட்டது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வேதனை தெரிவித்தார். தரமணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர் களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

10 நாட்களுக்கு முன்பு வணிக சிலிண்டர் விலையை ஒரே நேரத்தில் ஆயிரம் ரூபாயை உயர்த்தியது, நாடு முழுவதும் ஹோட்டல் தொழிலை முடக்கியுள்ளது. இதன் விளைவாக பல லட்சம் ஹோட் டல் தொழிலாளர்கள், உணவு விநியோ கிக்கும் தொழிலாளர்கள் வேலை இழந் துள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் ஆட்டோ, கார்களுக்கான எரிவாயு விலை யை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். மக்கள் மிகமோசமான பாதிப்புக்கு உள்ளவர்கள்.

கடும் நெருக்கடியில் வாழும் குடும்பங் கள், புயலில் சிக்கிய படகு போல் மீள முடி யாத துயரத்திற்கு ஆளாவார்கள். பெட்ரோல் - டீசல் உள்ளிட்டவை அத்தி யாவசியமான பொருட்களாக மாறி விட்டன. இவற்றைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது. இதற்கான மானியத்தை ஒன்றிய அரசு வழங்கி, இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதைச் சொல்லி விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. கச்சா எண்ணெய் விலை 25 டால ராக இருந்த போது, பெட்ரோலியப் பொருட் களின் விலையை குறைக்கவில்லை.

அப்போது பெட்ரோலிய நிறுவனங்கள் ஏராளமான லாபத்தை குவித்தன. அப் போது கொள்ளை லாபம் ஈட்டியவர்கள், நெருக்கடி ஏற்படும்போது மட்டும் நட்டத்தை பொதுமக்கள் தலையில் சுமத்துவதை ஏற்க முடியாது. இந்த நட்டத்தை எண்ணெய்க் கம் பெனிகள் ஏற்க வேண்டும். அந்நிறுவ னங்களுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்கி விலை உயர்வை திரும்பப் பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.