தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

29 May 2026, 10:58 pm
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில், மே.29- சிபிஎம் அகில இந்திய பொதுச்செய லாளர் எம்.ஏ பேபி மற்றும் தலைவர்களை அத்துமீறி கைதுசெய்த ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து நித்திரவிளை சந்திப்பில் முஞ்சிறை வட்டார குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலா ளர் அலெக்ஸ்,வட்டாரகுழு உறுப்பினரும் கொல்லங்கோடு நகர்மன்ற உறுப்பினரு மான முகமது புரோஸ்கான் விளக்க உரை யாற்றினார். வட்டார குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான லலிதா நிறை வுரையாற்றினார். வட்டாரது உறுப்பினர்கள் டிக்கார்தூஸ், அம்பிளி, வாலிபர் சங்க பொறுப்பாளர் இர்பான் பைசி மற்றும் பலர் பங்கேற்றனர். அருமனை கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்து மேல்புறம் சந்திப்பில் வட்டார செயலாளர் கிறிஸ்டோபர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் ஆர். லீமா றோஸ் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரன், வட்டார குழு உறுப்பினர்கள் ஹென்றி, சத்தியேந்திரன், சுரேஷ்குமார், மற்றும் தென்னை விவசாய சங்க மாவட்ட தலைவர் வின்சென்ட் ஆகி யோர் உரையாற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கொட்டும் மழையில் வட்டாரச் செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை, மாநில குழு உறுப்பினர் ஆர். லீமாரோஸ் மற்றும் வட்டாரக் குழு உறுப்பி னர்கள் ,கிளை தோழர்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.