மார்க்சிஸ்ட் கட்சி மனு: குடிநீர் குழாய் சீரமைப்புப் பணி உடனே துவக்கம்!
15 Jul 2026, 10:50 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சி மனு: குடிநீர் குழாய் சீரமைப்புப் பணி உடனே துவக்கம்!</strong></p><p><strong></strong>திருப்பூர், ஜூலை 15- திருப்பூர் தெற்கு மாநகரம் 43ஆவது வார்டுக்குட்பட்ட ஏபிடி ரோடு, ஆரம்பப்பள்ளி வீதி, கருவம்பாளையம் பகுதி களில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலா ளர் த.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பானுமதி, மாநகரக்குழு உறுப்பினர்கள் பா.ஞானசேகர், ஜி.சுரேஷ் குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மனு அளிக்கப் பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட பகுதி குழாய் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து குடிநீர் குழாய் சீர மைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.</p>
