ஆக. 26 - 31 சிபிஐ(எம்) மக்கள் சந்திப்பு இயக்கம் மனித மனங்களுடன் ஓர் உரையாடல் - கே.அர்ஜூனன்
yesterday

ஆக. 26 - 31 சிபிஐ(எம்) மக்கள் சந்திப்பு இயக்கம் மனித மனங்களுடன் ஓர் உரையாடல் - கே.அர்ஜூனன்

ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதில் ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் ஆழப் பதிந்து கிடக்கிறது. அந்தக் கருத்துக்களில்சில நினைவுக்கு வரும்போது அல்லது நினைவு படுத்தும் போது புதிய சிந்தனை பிறக்கிறது. தனி மனிதரின்சிந்தனையில் சக மனிதர்களின் உரையாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.தற்போதைய சூழலில் கணவன், மனைவி, குழந்தைகளோடு நடத்தும் உரையாடல்கள், நண்பர்கள்,உறவினர்களுடன் நடத்தும் உரையாடல்கள் குறைந்து சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடல் அதிகரித்து வருகிறது.

பொய் மூட்டைகளும் அரசியல் யதார்த்தமும்

சமூக வலைத்தளம் தனி மனிதர்களிடம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறது.அது சமூகத்திலும் பலத்த தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அதுவே மெய்யாகிவிடும் எனும் பாசிச ஹிட்லரின் அமைச்சர்கோயபல்ஸின் தத்துவம், இன்று பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. பொய்யை தேன் தடவி சொல்லுவது; பாதி உண்மையையும், பாதி பொய்யையும் கலந்து சொல்லுவது; உண்மையைப் போலவே உரக்கச் சொல்லுவது சாதாரணமாக நடைபெறுகிறது.

“ஒரு பொய்யை நம்புகிற மாதிரி சொல்றதுலஇவன் பெரிய கெட்டிக்காரன்” என பொய்யர்களைப் புகழ்ந்து பேசுவதுண்டு. பொய்யே சொல்லாத அரிச்சந்திரன் அரசாட்சியை இழந்த கதையும், பொய்களின்மூலமே ஆட்சியைப் பிடித்த பிரதமர் நரேந்திர மோடியின் வரலாறும் நம் நாட்டில் உண்டு.ஒவ்வொரு மனிதரும் அன்றாட வாழ்வில் அடுத்த வீட்டில், அடுத்த தெருவில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் என்னநடக்கிறது எனும் செய்தியை அறிந்து கொள்ள அதிக நேரம் செலவு செய்கிறார். செவி வழிச் செய்திக்கு நேரடி உரையாடலும், படித்துப் பார்க்க பத்திரிகைகளும், பார்த்து தெரிந்திட தொலைக் காட்சிகளும் உள்ளன.உலகமே உள்ளங்கையில் என்பது போல மொபைல் போனின் வருகையும் அதில் சமூக வலைத்தளச் செயல்பாடும்தகவல் தொடர்பை மிக நெருக்கமாகிவிட்டது.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் மற்றவர் கருத்தை அறியவும் தனது கருத்தை பதியவும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இதன் மூலம் பல பொய்களும், பாதி உண்மையும் பாதி

பொய்யும் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது.“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்றார் அய்யன் திருவள்ளுவர். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது முதுமொழி. இப்படியெல்லாம் சொன்னாலும் அலங்கார வார்த்தைகளால் சொல்லும் பொய்களை யாரும் ஆழ்ந்து ஆய்வுசெய்வதில்லை. இதுவே பெரும்பாலான வர்களை ஆக்கிரமித்து உள்ளது.“உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்“ என பட்டுக்கோட்டையின்கடுமையான விமர்சனப் பாடல் வரிகளையும் புறந்தள்ள முடியாத நிலையில், “இந்த நாடு வளர்ச்சிப் பாதையில்செல்கிறது; உலகமே நமது நாட்டை உற்று நோக்குகிறது. 2047 ஆம் ஆண்டு நமது நாடு வல்லரசாகும்; அண்டைநாடுகள் எல்லாம் நம்மை பார்த்து நடுநடுங்குகிறது; இந்த இடத்திலேதான் ராமர் பிறந்தார்; அந்த இடத்திலே தான் கிருஷ்ணர் பிறந்தார்” என இல்லாததையும் பொல்லாததையும்இந்திய நாட்டின் பிரதமரே பேசித் திரிவதை நாடு பார்த்துக் கொண்டி ருக்கிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வும் மக்களின் பிரச்சனைகளும்

இந்தியா முன்னேறுகிறது என பிரதமர் சொல்வது நமது நாட்டில் உள்ள முதல் நிலையில் இருக்கும் 10 செல்வந்தர்களின் முன்னேற்றத்தைத் தான் 2025 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியிடம் 9. 55இலட்சம் கோடியும் கௌதம் அதானியிடம் ரூ.8.14 இலட்சம் கோடியும் சொத்து உள்ளது. இன்னும் டாட்டா, பிர்லா, பஜாஜ் உள்ளிட்ட 8 பெரும் முதலாளிகளிடம் சராசரியாக ரூபாய் 2 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை சொத்துக்கள் குவிந்துள்ளன. கடந்த 5ஆண்டுகளில் பெரும்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 56 இல் இருந்து 358 பேராக உயர்ந்துள்ளது. 1687 பேரிடம் ஆயிரம் கோடிரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் உள்ளன.குடிநீர் கிடைக்காத தெருக்கள், கழிப்பிட வசதி இல்லாத கிராமங்கள், சாலை வசதி இல்லாத ஊர்கள், சொந்த வீடில்லாத மக்கள் என நாட்டில் கோடானு கோடி பிரச்சனைகள் உள்ளன. இந்தியா பணக்காரநாடு தான். ஆனால், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அறிவிப்பு.

‘லஞ்சம் வாங்க மாட்டேன், லஞ்சம் வாங்குறவங்களையும் விடமாட்டேன், லஞ்சம் வாங்குனவங்களையும் விடமாட்டேன்’ போன்ற சினிமா வசனம்; அப்பாவைகாணோம், கரூர் கம்பெனி முன்னாள் அமைச்சர், சங்கி அமைச்சர், 3 மணி நேரம் டாய்லெட்டில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்,டாய்லட்டை வேவு பார்க்கும் அமைச்சர், 900 கோடி கட்சி நிதி வாங்கப்பட்டது, நிதி கொடுத்தது உங்க மாமா தான்.நிதியை வாங்கியது உங்க அப்பா தான்- என தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் லாவணிக்கச்சேரிகள் 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்று என்பதில் எந்த அர்த்தமும் இல்லைஎன்பதையே வெளிப்படுத்துகின்றன. மக்களின் உண்மையான வாழ்க்கைப் பிரச்சனைகளை உரக்கச் சொல்ல வேண்டிய மக்களோடு விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

“விலைவாசி உயருது; வேலை கிடைக்கவில்லை. விவசாயம் சரியில்லை; விளையும் பொருளுக்கு கட்டுபடியான விலையில்லை; விதை, உரம், பூச்சிமருந்து விலை எல்லாம் கூடிப் போச்சு; விபிஜி ராம்ஜி என 100 நாள் வேலை சட்டத்தின் பெயரை மாற்றி, நிதியைக்குறைச்சி, வேலையே இல்லாம ஆக்கிட்டாங்க; கல்வியும், மருத்துவமும் வியாபாரமா மாறிப்போச்சு; நீட் உள்ளிட்டஅனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் முறைகேடு; குடிநீரை கூடத் தனியாரின் விற்பனை பண்டமாக மாத்திட்டாங்க;குடியிருக்க வீடு இல்லை; குடிமனை பட்டா இல்லை;சாதியால் மதத்தால் மக்களைக் கூறுபோடும் அவல நிலை; பெண்கள் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை”என எங்கு திருப்பினாலும் மக்களின் அவலக் குரல்கள்; அபயக் குரல்கள் கேட்ட வண்ணம் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் இயக்கம்

இவ்வாறான கேள்விகளுக்கு விடை தேடவும், போராட்டமே தீர்வு என்பதை உரக்கச் சொல்லவும் மக்களை வீடுவீடாக சந்தித்து கலந்துரையாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை 10,000 கிராமங்களில், தெருக்களில் ஒரு லட்சம் தோழர்கள் வருகிறார்கள்.“அவராண்டார், இவராண்டார், எல்லோரும் ஆண்டார், அனைவரது ஆட்சியிலும் ஜனங்களே மாண்டார்” என்பதுகவிஞர் தணிகைச் செல்வன் கவிதை வரிகள். உண்மையான மாற்றம் என்றால் என்ன என்பதை எடுத்துச்சொல்வோம்.“சோசலிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று” என்பதை மக்கள் மனங்களில் விதைப்போம்.

கேள்விகளுக்கு விடை தேடவும், போராட்டமே தீர்வு என்பதை உரக்கச் சொல்லவும் மக்களை வீடு வீடாக சந்தித்து கலந்துரையாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10,000 கிராமங்களில், தெருக்களில் ஒரு லட்சம் தோழர்கள் வருகிறார்கள்.