முந்தய பக்கம்

தேர்தல் அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி

7 Apr 2026, 5:30 am
தேர்தல் அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி

தேர்தல் அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி

சென்னை, ஏப். 8 - தமிழக மக்களின் முன்னேற்றம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகளைப் பாதுகாப்போம், நிலைகுலைந்தவாறாக இருக்கும் அதிமுக - பாஜக கூட்டணியை முழுமையாகத் தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற 17-ஆவது பொதுத்தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் சிபிஎம் உறுப்பினர்கள் வலுவான குரலாகத் திகழ்வார்கள். தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பாடுபடும்.

Share
FacebookXWhatsAppTelegram