தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி அடக்குமுறையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

10 Oct 2026, 10:18 pm
தில்லி அடக்குமுறையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

தில்லி அடக்குமுறையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

புதுதில்லி, அக். 10 –தலைநகர் தில்லியிலும் பிற இடங்களிலும் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவன்மையாகக் கண்டித்துள்ளது. இதற்கு

எதிராக நாடு முழுவதும் அனைத்துக் கட்சிக் கிளைகளும் கண்டனப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அக்டோபர் 10 அன்று தில்லியில் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையில், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோரைத் தில்லி காவல்துறை கைது செய்தது. கட்சியின்பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏறத்தாழ ஒட்டுமொத்தத் தலைமையும்காவலில் எடுக்கப்பட்டது.

சிவதாசன் எம்.பி. உள்ளிட்டோருக்குக் காயம்கைது செய்யப்பட்டவர்களில் பலரைக் காவல்துறையினர் முரட்டுத்தனமாகத் தள்ளி, தாக்கி இழுத்துச் சென்றனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன் உள்ளிட்ட சிலருக்குக் காயம் ஏற்பட்டது.உணவு, தண்ணீர், மருந்து மறுப்புஅரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.என்.பாலகோபால், ஜான் பிரிட்டாஸ் எம்.பி ஆகியோர் மணிக்கணக்கில் காவல் வாகனத்துக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவும் தண்ணீரும் மறுக்கப்பட்டன; அத்தியாவசிய மருந்துகளை உட்கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை.மௌரியா என்கிளேவ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியம் தாவ்லே உள்ளிட்ட பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்ட ஒரு குழுவினரின் கைபேசிகளைக் காவல்துறை பறித்துக்கொண்டது.அப்பட்டமான எதேச்சதிகாரம்பெருமளவிலான படைக் குவிப்பு, சாலைகளில் தடுப்புகள், நடமாட்டத்துக்கும் தகவல் தொடர்புக்கும் கடும் கட்டுப்பாடுகள் என அரசின் ஒட்டுமொத்த பலமும் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டது. இவை அனைத்தும் அமைதியாகப் போராடும் ஜனநாயக உரிமை மீதும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரங்கள் மீதும் நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதல்; எதேச்சதிகாரத்தின் அப்பட்டமான வெளிப்பாடு.

மக்கள் திரள்வதைக் கண்டு அரசு அஞ்சுகிறது என்பதையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்த கடுமையான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதிலேயே அது உறுதியாக உள்ளது என்பதையும் அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது. வாக்குரிமை ஜனநாயகத்தின் அடிப்படை. வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகளாலோ,தன்னிச்சையான நீக்கங்களாலோ அதைச் சிதைக்க முடியாது.

மூன்று கோரிக்கைகள்இந்த அடக்குமுறையைக் கண்டித்து நாடு முழுவதும் கட்சியின் அனைத்துக்

கிளைகளும் போராட்டங்களை நடத்த வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பொறுப்பாக்கிப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்த வேண்டும்; பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டங்கள் நடைபெற வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க மோடி அரசு கையாண்ட பாசிச வழிமுறைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயற்குழுவும் வன்மையாகக் கண்டித்துள்ளது. மத்திய தில்லியில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரைக் குவித்து, ரயில்களை ரத்து செய்து, இணையத்தைத் துண்டித்து, 57 மெட்ரோ

நிலையங்களை மூடி, தலைநகரை ராணுவ முகாமாக அரசு மாற்றியது என்றும், தில்லி காவல்துறையின் உடந்

தையுடன் ஆர்எஸ்எஸ் சார்பு குண்டர்கள் போராட்டக்காரர்களைத் தாக்கினர் என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் பிடித்து இழுத்துச்

செல்லப்பட்டனர்; செய்தி சேகரிக்கவிடாமல் பல செய்தியாளர்களும் கைது செய்யப்பட்டது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும் அறிக்கை சாடியுள்ளது.

கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர்கள் ராம கிருஷ்ண பண்டா, கே.பிரகாஷ் பாபு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றப் பொதுச் செயலாளர் சுக்ஜிந்தர் மகேசரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனப் பொதுச் செயலாளர் நிஷா சித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றப் பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், தலைவர் விராஜ் தேவாங் ஆகியோரும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கடும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் உறுதியாக நின்ற மாணவர்களையும் இளைஞர்களையும் பாராட்டியுள்ள அக்கட்சி, “ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; தேர்தல்முறை முழுமையாகச் சீர்திருத்தப்பட வேண்டும். இப்போராட்டம் நிற்காது; நாடு முழுவதும் பரவும்” என்று தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.