தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் தீவிர மக்கள் சந்திப்பு இயக்கம்

10 hours before
மார்க்சிஸ்ட் கட்சியின் தீவிர மக்கள் சந்திப்பு இயக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் தீவிர மக்கள் சந்திப்பு இயக்கம்

நாமக்கல், ஆக. 31-தமிழகம் முழுவதும் மக்களின் அடிப்படை மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு ஒன்றியங்கள் மற்றும் கிளைப் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைசந்தித்து உரையாடினர்.

முன்னதாக இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் எழூரில் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ராசிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவுரை நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நருவலூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வேலுச்சாமி, நாமக்கல் பிரதேச கமிட்டிச் செயலாளர்கு.சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இங்கு, குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்யக்கோரி செப்டம்பர் 8 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிபாளையம் தெற்கில், ஒன்றியச் செயலாளர் எம்.லட்சுமணன் தலைமையிலும், பள்ளிபாளையம் வடக்கில் ஒன்றியச் செயலாளர் சந்திரமதி தலைமையிலும், திருச்செங்கோடு நகரத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்செங்கோடு ஒன்றியம் (சித்தாளந்தூர்) ஒன்றியச் செயலாளர் கே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வை மூத்த தலைவர் ஏ.ஆதிநாராயணன் துவக்கி வைத்தார். இதேபோன்று, பரமத்தி வேலூர், எலச்சிபாளையம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிளைகளிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில், தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள தனியார் பேருந்து களின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்து, நகரப் பகுதிகளில் வீணாகும் குடிநீரை புதிய இணைப்புகள்மூலம் சரி செய்ய வேண்டும். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் விஷக்கடி மருந்துகளை போது

மான அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும். மூடப்பட்ட நகர்ப்புற சுகாதார மையத்தை மீண்டும் மக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கொக்கராயன்பேட்டை பிரதான சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ஊர் பொதுக்கிணற்றை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். கொல்லப்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இன்ஜினியரிங் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நல வாரிய சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.