நாகர்கோவில் மாநகரில் 100 சந்தாக்கள் ஒப்படைப்பு
4 Jul 2026, 9:47 pm
<p><strong>நாகர்கோவில் மாநகரில் 100 சந்தாக்கள் ஒப்படைப்பு</strong> </p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வு வெட்டூர்ணிமடத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநகரச் செயலாளர் எஸ். அருணாச்சலம் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாநகரக்குழு சார்பில் 100 தீக்கதிர் ஆண்டுச் சந்தாக்களுக்கான தொகை, மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். அகமது உசேன், என்.எஸ். கண்ணன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் இந்திரா மற்றும் பலர் பங்கேற்றனர்.</p>
