‘சரியான அரசியலுக்கான இயக்கம்’
2 Sept 2026, 8:41 pm

‘சரியான அரசியலுக்கான இயக்கம்’

மும்பைமகாராஷ்டிராவில் சரியான அரசியலுக்கான இயக்கத்தை (Movement for Clean Politics)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியுள்ளது. பீட் மாவட்டத்தின் பரலி, வர்தா மாவட்டத்தின் வர்தாவி ஆகிய இடங்களில் இருபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்தஇரு மாநாடுகளிலும் தலா 1,000-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகளை உடைப்பது, எதிர்க்கட்சிஎம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, மற்றும் ஒருதலைப்பட்சமான வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்,தொகுதி மறுவரையறை போன்ற நடவடிக்கைகளைத் திணிக்க அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்டஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊழல் மற்றும்ஒழுக்கக்கேடான அரசியலை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிர மாநிலக்குழு அம்மாநாட்டின் வாயிலாக கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேலும், ஒன்றியம் மற்றும் மாநிலங்களில்ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக அரசுகளின் மக்கள் விரோத, கார்ப்பரேட்ஆதரவு, மதவாத மற்றும் சாதிய வாதக்கொள்கைகளையும், அயோத்தி ராமர்கோவிலில் ராமர் பக்தர்கள் செலுத்தியகோடிக்கணக்கான ரூபாய் காணிக்கைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெட்கமின்றி கொள்ளையடித்ததையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இம்மாநாடுகளில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே, மகாராஷ்டிரா மாநிலச்செயலாளர் அஜித் நவாலே, மத்தியக்குழு உறுப்பினர் வினோத் நிகோலே உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில்பங்கேற்றனர்.

மகாராஷ்டிராவில் ‘இந்தியா’ (INDIA)அணியில் நிலவும் குழப்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும்சிபிஐ(எம்) இந்த சுய அரசியல் மற்றும் அமைப்பு பலத்தைப் பலப்படுத்த இம்மாநாடுகளில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘சரியான அரசியலுக்கான இயக்கம்’தற்போது மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ளன.