தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘பனிக்கட்டியை விட வேகமாக உருகுகிறது திரிணாமுல்’ மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்க்க சிபிஎம் தயார் : முகமது சலீம் உறுதி

23 May 2026, 9:39 pm
‘பனிக்கட்டியை விட வேகமாக உருகுகிறது திரிணாமுல்’ மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்க்க சிபிஎம் தயார் : முகமது சலீம் உறுதி

‘பனிக்கட்டியை விட வேகமாக உருகுகிறது திரிணாமுல்’ மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்க்க சிபிஎம் தயார் : முகமது சலீம் உறுதி

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் திரிணா முல் காங்கிரஸ் பனிக் கட்டியை விட வேகமாக உருகி வரும் சூழலில், பாஜகவை எதிர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயார் என சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநிலச் செயலாள ருமான முகமது சலீம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,“15 ஆண்டுகளுக்கும் மேலாக, காவல்துறையும், குண்டர்களையும் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் திரி ணாமுல் கட்டவிழ்த்து விட்ட வன்முறை அரசியல் ஒரு வெற்றிடத்தை உரு வாக்கியது. இந்த சூழலை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் உள்நாட்டிற்குள் வளர்வதற்கு திரிணாமுல் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக இடதுசாரிகளையும் மற்ற எதிர்க்கட்சிகளையும் மாநிலத்தில் ஓரங்கட்டுவதற்காக, திரிணாமுல் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிக ளுமே மதத்தை மையமாகக் கொண்ட ஓர் அரசியல் இருமுனைப் போட்டியை வளர்த்தெடுக்க முயற்சித்தன.

எதிர்க்கட்சி இடத்தில் இடதுசாரிகள்

எனினும் சமீபத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலை மையிலான திரிணாமுல் காங்கிரஸ் பல வீனமடைந்துள்ளது. இந்த கோடை கால வெப்பத்தில் அந்த கட்சி “பனிக் கட்டியை விட வேகமாக உருகி வரு கிறது”. அரசியல் செல்வாக்கையும் மிக மோசமான அளவில் இழந்து வரு கிறது. அதனால் மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் இடதுசாரி கட்சிகள், குறிப்பாக சிபிஎம் முன்ன ணியில் உள்ளது. திரிணாமுல் மீதான அதிருப்தி அதிகரித்து வருவதால், மக்களின் ஆதரவு படிப்படியாக சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்ன ணியின் பக்கம் திரும்பி வருகிறது.

எதிர்க்கட்சி இடத்தை இடதுசாரி கள் நிரப்புவார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப் பட்ட நடைபாதை வியாபாரிகளின் இடப்பெயர்வு குறித்து இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஏற்கெனவே கவலைகளை எழுப்பி யுள்ளன. பொருளாதார ரீதியாக நலி வடைந்த பிரிவினரின் வாழ்வாதா ரத்தை பாஜக அரசு இலக்கு வைக்கி றது. இது மோசமான சூழலை ஏற்படுத் தும். மேற்கு வங்கத்தில் சிறுபான்மையி னரின் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் மற்றும் வங்காளத்தின் கலாச்சாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக சிபிஎம் தொடர்ந்து போராடும்” என முகமது சலீம் உறுதிபட கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.