முந்தய பக்கம்

காலமானார்

19 May 2026, 1:16 am
காலமானார்
<p><strong>காலமானார்</strong> </p><p>சென்னை, மே 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈஞ்சம்பாக்கம் கிளை உறுப்பினரும், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை நிர்வாகியுமான ப.நாராயணனின் தம்பி ப.துளசிராமன் ஞாயிறன்று (மே 17) அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 41. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், டி.சுந்தர், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.விஜயகுமார், எம்.ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் திங்களன்று (மே 18) ஈஞ்சம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram