அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்து உயரதிகாரியுடன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துரையாடல்
5 Dec 2025, 4:21 pm
<p><strong>அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்து உயரதிகாரியுடன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துரையாடல்</strong></p>
<p>திருப்பூர், டிச.5- அவிநாசி அத்திக்கடவு திட்ட செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் இந்தத் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்புப் பொறியா ளரைச் சந்தித்து விபரங்கள் கேட்டறிந்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்‌.குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன், அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ்வ ரமூர்த்தி, விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ரங்கசாமி, செயலாளர் அப்புசாமி, அவினாசி ஒன்றிய நிர்வாகிகள் குமாரசாமி, கருப்புசாமி உள்ளிட்டோர் நம்பி யூர் அருகில் உள்ள எம்மாம்பூண்டியில் செயல்படும், அத்திக்கடவு அவினாசி திட்ட நீரேற்று நிலையம் எண்.5க்கு வெள்ளியன்று சென்றனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் நீர் வரத்து மற்றும் நீரேற்றம் மற்றும் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பிய விவரம் குறித்து கேட்டறிந்தனர். எல் & டி தனியார் நிறுவன பணி யாளர்கள் விநியோகத்தின்போது ஏற்படும் பழுதுகள் சீரமைப்பது மற்றும் சீராக தண்ணீர் விநியோகிப்பது குறித்த விவரங்களை தெரி வித்தனர். சில இடங்களில் ஓஎம்எஸ் கருவி மற்றும் வால்வுகளை சிலர் தன்னிச்சையாக இயக்குவது திட்டப்பணிக்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்தனர். இதை தொடர்பு டையவர்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். பின்பு அவிநாசியில் உள்ள நீர்வளத் துறை சிறப்புத் திட்டத்தின் வட்டக் கண்கா ணிப்பு பொறியாளர் அன்புச்செல்வத்தை சந் தித்து பேசினர். அப்போது, இந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்படி குளம், குட்டைகள் பலவற்றில் நீர் நிரப்பாத நிலைமைகளையும், தண்ணீரே வராத குட்டைகளைப் பற்றியும் தெரிவித்தனர். கண்காணிப்பு பொறியாளர், இக்கருத்துக்களை கேட்டுக்கொண்டு, திட் டத்தில் உள்ள 1045 குளம், குட்டைகளில் 1033-க்கு நீரேற்றப்பட்டுள்ளது என்று தெரி வித்தார். திருப்பூர் வடக்கு, அவிநாசி பகுதியில் குறிப்பிட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட வில்லை என மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கண் காணிப்பு பொறியாளர் கூறினார்.</p>
