தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர் எஸ்.ராஜவேல் காலமானார் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

21 May 2026, 1:34 am
பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர் எஸ்.ராஜவேல் காலமானார் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
<p><strong>பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர் எஸ்.ராஜவேல் காலமானார் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி</strong></p><p>கடலூர், மே 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பி னர் மறைந்த எஸ்.துரைராஜியின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியருமான எஸ்.ராஜவேல் (70) செவ்வாயன்று காலமானார். பண்ருட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புதன்கிழமை அவரது உடல் கெடிலம் நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.