தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

6 முறை சிறை சென்றும் தளராத போராளி மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பெரியசாமி மறைவு

1 hour before
6 முறை சிறை சென்றும் தளராத போராளி மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பெரியசாமி மறைவு

36 முறை சிறை சென்றும் தளராத போராளி மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பெரியசாமி மறைவு

மதுரை, ஜூன் 24- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த முன் னோடியும், சிஐடியு தொழிற் சங்க இயக்கத்தின் அர்ப்ப ணிப்பு மிக்க போராளியுமான ஏ.பெரியசாமி (91) செவ் வாய்க்கிழமை நள்ளிரவில் காலமானார்.

அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர்கள் சு.வெங்க டேசன் எம்.பி., மதுக்கூர் ராம லிங்கம், மாநிலக்குழு உறுப் பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மேற்கு-1 பகுதிச் செயலாளர் பி.வீரமணி,வி.கே. பழனி, தீக்கதிர் மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சிஐடியு மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏரா ளமானோர் அஞ்சலி செலுத் தினர்.

புதன்கிழமை மாலை மதுரை பழங்காநத்தம் பசும் பொன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கட்சித் தோழர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திர ளாக பங்கேற்று இறுதி அஞ் சலி செலுத்தினர். 1936-ஆம் ஆண்டு பிறந்த ஏ.பெரியசாமி, 1952-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி ஆலையில் பணியில் சேர்ந் தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத் தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அவர், 1955-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி யில் உறுப்பினராக இணைந் தார். 1964-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அத னுடன் இணைந்து வாழ்நாள் முழுவதும் இயக்கப் பணி யில் ஈடுபட்டார்.

மீனாட்சி மில் தொழிலா ளர்களின் உரிமைப் போரா ட்டங்களில் முக்கிய பங்காற் றிய அவர், சிஐடியு பஞ்சா லைத் தொழிலாளர் சங்க நிர் வாகி, மாவட்டக்குழு உறுப் பினர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மேலும், மீனாட்சி மில் தொழிலாளர்களின் வைப்பு நிதி அறக்கட்டளை யின் உறுப்பினராக 20 ஆண்டு களுக்கும் மேலாக செயல் பட்டார்.

1982-ஆம் ஆண்டு நடை பெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட் டத்தில் பங்கேற்றதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அவர், தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக நடைபெற்ற பல்வேறு போரா ட்டங்களில் தொடர்ந்து ஈடு பட்டார். தனது அரசியல் மற் றும் தொழிற்சங்கப் பணிக் காக மொத்தம் 36 முறை சிறை சென்றதுடன், 18 மாதங் கள் சிறைவாசமும் அனுப வித்தார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பின்னர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வட்டக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறு ப்புகளை வகித்த அவர், பழங்காநத்தம் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கும், கட்சி அலுவலகம் உருவாக் கக்கப்படுவதற்கும் குறிப்பி டத்தக்க பங்களிப்பு செய் தார். அவரது மனைவி ராமு அம்மாள் சில ஆண்டு களுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

அவரது குடும்பத்தினரும் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இறுதி நிகழ்ச்சிக்கு முன் னதாக மூத்த தோழர் ஆர்.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற புகழஞ்சலி கூட் டத்தில் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், பகுதிச் செயலாளர் பி.வீரமணி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.போஸ், எஸ்.வி. சுதன், அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாலை முத்து, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் முத்து கிருஷ்ணன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவ ட்டச் செயலாளர் எஸ்.வேல் தேவா, பொருளாளர் க. கௌதம் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

மேலும் திமுக, அதிமுக உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர், வெகு ஜன அரங்கத் தோழர்கள் தோழர் பெரியசாமி மறை விற்கு நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

ஆறு தசாப்தங்களுக் கும் மேலாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் பொதுமக் கள் நலனுக்காக போராடிய ஏ.பெரியசாமியின் மறைவு, மதுரை மாவட்ட இடதுசாரி இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவ ரது போராட்ட வாழ்க்கையும், தியாகங்களும் இளம் தலை முறைக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.