தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோழிக்கோட்டில் விரிவடைந்த மாநிலக் குழு கூட்டம் கேரளத் தேர்தல் தோல்வி மதிப்பீடு; அமைப்பை பலப்படுத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை!

yesterday
கோழிக்கோட்டில் விரிவடைந்த மாநிலக் குழு கூட்டம் கேரளத் தேர்தல் தோல்வி மதிப்பீடு;  அமைப்பை பலப்படுத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை!

கோழிக்கோட்டில் விரிவடைந்த மாநிலக் குழு கூட்டம் கேரளத் தேர்தல் தோல்வி மதிப்பீடு; அமைப்பை பலப்படுத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை!

கோழிக்கோடுகேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வதற்கும், கட்சியின் மக்கள் தளத்தையும் அரசியல் நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கும், அதற்கான தெளிவான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வழிவகைகளை வகுப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவடைந்த மாநிலக் குழு கூட்டம் கோழிக்கோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது.

தலைவர்களின் பங்கேற்பு

கட்சியின் மூத்த தலைவர் பாலோலி முகமது குட்டி செங்கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், மத்தியக் குழு உறுப்பினர்கள் எளமரம் கரீம் தியாகிகளுக்கு செவ்வணக்க தீர்மானத்தையும், கே.கே.சைலஜா இரங்கல் தீர்மானத்தையும் வாசித்தனர். இக்கூட்டத்தில் மத்தியக் குழுவின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களான பி.வி.ராகவலு, டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் விஜூ கிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் உ. வாசுகி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்: எம்.ஏ. பேபி

மாநாட்டைத் துவக்கிவைத்து உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, தேர்தல் தோல்விகளை மதிப்பிடும்போது, வெறும் நான்கு உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டு இன்று வலிமைமிக்க மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ள கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கேரளாவின் எதிர்காலத்தையும் இந்திய நாட்டின் போக்கையும் நிர்ணயிக்கும் விழிப்புணர்வுடனும் உறுதியுடனும் கூடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு தற்போது கட்சிக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சமூக மற்றும் பல்பரிமாண முன்னேற்றத்திற்கும் இடதுசாரி அரசாங்கங்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை எக்காலத்திலும் எவரும் மறந்துவிட முடியாது என்றும், மாநிலத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் இடதுசாரி அரசுகள் எப்போதும் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள், எதிர்காலச் செயல் திட்டங்கள்

இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய முன்னெடுப்புகள் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளுக்குத் தெளிவான திசையைக் காட்டும் வகையிலான முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன. தேர்தல் களத்தில் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்வதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவது, கட்சியின் தலையீடுகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆழமாக விவாதிக்கப்படுகிறது.

தொடக்க உரைக்குப் பிறகு, மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மாநிலக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையை விவாதத்திற்காகச் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்பட மொத்தம் 307 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 15 அன்று நிறைவடைய உள்ளது.

பிரம்மாண்டப் பொதுக்கூட்டம்

செப்டம்பர் 15 அன்று கோழிக்கோடு கடற்கரையில் உள்ள சுதந்திரச் சதுக்கம் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் சிறப்பு மாநிலக் குழு கூட்டம் நிறைவபெறும். பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், ஏ. விஜயராகவன் மற்றும் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.