புதிய மனிதர்களை உருவாக்கும் தத்துவக் கையேடு - எம்.ஜே. பிரபாகர்
31 May 2026, 8:15 pm

புதிய மனிதர்களை உருவாக்கும் தத்துவக் கையேடு - எம்.ஜே. பிரபாகர்

இந்தியாவில் மார்க்சிய இயக்கத்தின் பரி ணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு முக்கிய மான வழிகாட்டியாகத் திகழ்கிறது தோழர் வீ. பழனி எழுதிய “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): ஓர் அறிமுகம்” என்ற நூல்.

வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், புரட்சி, கட்சித் திட்டம், அமைப்பு என எட்டு அத்தியாயங்களில், 110 முக்கிய அம்சங்களின் மூலம் கட்சியின் தத்துவார்த்தப் பாதையை எளிய மொழியில் ஆசிரியர் விளக்கியுள்ளார். இந்நூல் அவரது 50-ஆவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

1920-களில் இந்தியாவில் கம்யூ னிஸ்ட் இயக்கம் உருவானது முதல், 1964-இல் சிபிஐ(எம்) உருவானதற்கான வரலாற்றுச் சூழலை இந்நூல் விரிவாக விவரிக்கிறது.

மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளை இந்தியச் சூழலுக்கு ஏற்பப் பொருத்தி, கட்சியின் இறுதி இலக்கான ‘மக்கள் ஜனநாயகப் புரட்சி’ என்பதன் படிநிலைகளை ஆசிரியர் எளிமையாக விளக்கியுள்ளார். கட்சி யின் உட்கட்சி ஜனநாயகம், தொழிற் சங்கம், விவசாயிகள் சங்கம், வாலிபர், மாதர், மாணவர் சங்கம் உள்ளிட்ட வர்க்க-வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகள் இதில் பட்டியலிடப் பட்டுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னத மான செயல்பாட்டு முறையை நூல் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

கட்சியில் தனிநபர் முன்முயற்சிகளும் சுயேச்சையான செயல்பாடுகளும் வரவேற்கப்பட்டாலும், தன்னிச்சையான போக்குகளுக்கோ சொந்தக் கருத்து களுக்கோ இடமில்லை.

கூட்டுச் செயல்பாடே கட்சியின் அடிப்படை. கட்சி உறுப்பினர்கள் தங்களின் கடமை களை உணர்ந்து கட்சி நிதியையும் சந்தாவையும் முறையாகச் செலுத்த வேண்டும் என்றும்; கட்சியின் நிலைப் பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’, ‘மார்க்சிஸ்ட்’ உள்ளிட்ட இதழ்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

“உலகத்தை மாற்றுவதற்கு முன்னால், உன்னை மாற்றிக்கொள்” என்ற ஆழமான செய்தியோடு, துணிவு, தியாகம், தொடர் கல்வி மற்றும் மக்களின் மீதான அன்பே ஒரு சிறந்த கம்யூனிஸ்டை உருவாக்குகின்றன என்பதை நூல் உணர்த்துகிறது. இடது சாரி அரசியலின் மீதும் மக்கள் இயக்கங்களின் மீதும் ஈடுபாடு கொண்ட அனைவரும் தங்களின் நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறந்த அடிப்படைத் தரவு நூல் இது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்):ஓர் அறிமுகம் ஆசிரியர்: வீ. பழனி வெளியீடு: அ ஆ இ பதிப்பகம், பாளையங்கோட்டை விலை: ₹20 தொடர்புக்கு: 9443391196