தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்

9 Apr 2026, 5:30 am
உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்

உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, ஏப்.8- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலிப்பாளையம், எடக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்த வேலுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

வேட்பாளருக்கு பல இடங்களில் தோரணங்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்பகுதி மக்களின் நிறைவேற்றப்படாத நீண்ட நாள் கோரிக்கையான கத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி, எடக்கல் கிராம பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள 80 மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட வேட்பாளர் வெற்றிக்குப் பிறகு உங்கள் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.