உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am

உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் தீவிர பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, ஏப்.8- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலி கிராமம், எடக்கல், ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்த வேலுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

வேட்பாளருக்கு பல இடங்களில் தோரணங்கள் கட்டி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி, எடக்கல் கிராம பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள 80 மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட வேட்பாளர் வெற்றிக்குப் பிறகு உங்கள் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏராளமானோர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.