இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிராம மக்கள் நன்றி!
24 Sept 2026, 1:46 am
<p><strong>இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிராம மக்கள் நன்றி!</strong></p><p>தருமபுரி, செப்.23-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால், பேவுஅள்ளி கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைக்கான இடம் அளந்து, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சியில் உள்ள பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. அதன் விளைவாக கடந்த மூன்று மாதத்திற்கு முன் வருவாய்த்துறை மூலம் அக்கிராமத்தை சேர்ந்த 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகு பட்டா வழங்கப்பட்டதற்கான இடம் அளந்து கொடுக்கவில்லை. இதையடுத்து வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில் வட்டாட்சியர் அசோக்குமார் உத்தரவின் பெயரில், செவ்வாயன்று நில அளவையாளர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் மற்றும் மாதேசன் முன்னிலையில், பட்டாவுக்கான இடத்தை அளந்து 42 பயனாளிகளுக்கு வழங்கினர். தொடர்ந்து, வீட்டுமனை பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.</p>
