முந்தய பக்கம்

தோழர் ஹெத்ராம் பெனிவால் மறைவுக்கு எம்.ஏ.பேபி இரங்கல்!

24 Feb 2026, 1:15 pm
தோழர் ஹெத்ராம் பெனிவால் மறைவுக்கு எம்.ஏ.பேபி இரங்கல்!

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், சிபிஎம் மூத்த தலைவருமான தோழர் ஹெத்ராம் பெனிவால் மறைவுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட துணிச்சலான கம்யூனிஸ்ட் மற்றும் விவசாயித் தலைவரான தோழர் ஹெத்ராம் பெனிவால் நேற்று இரவு காலமானார். வரலாற்று சிறப்புமிக்க கட்சானா விவசாயிகள் போராட்டம் உட்பட பல இயக்கங்களுக்கு தோழர் பெனிவால் தலைமை தாங்கி, ராஜஸ்தானில் மக்கள் போராட்டத்தின் குரலாக மாறினார்.
தோழர் ஹெத்ராம் பெனிவால் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருப்பார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பான தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ரெட் சல்யூட், தோழர்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram