மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளக்ஸ் போர்டு சேதம் குற்றவாளிகள் கைது கோரி புகார்
2 Nov 2026, 8:54 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளக்ஸ் போர்டு சேதம் குற்றவாளிகள் கைது கோரி புகார்

மதுரை, நவ.2-மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 2 ஆம் தேதிமாலை 5 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகே, காவல்நிலையம் எதிரில் பிரச்சார இயக்கம் மற்றும்ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.இதையொட்டி, கட்சியின் கோரிக்கைகளை விளக்கும் வகையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை, நவம்பர் 1 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கிழித்துச்சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, பிளக்ஸ் போர்டைச் சேதப்படுத்தியவர்களை கைது செய்து சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம்தாலுகா செயலாளர் எம்.ஜெயக்குமார், காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.