முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்

15 Jun 2026, 12:27 am
மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்</strong></p><p>ஈரோடு, ஜூன் 14- கட்சியின் முன்னாள் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அய்யாவு-வின் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதி வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றிவர் தோழர் அய்யாவு. இவர் சாலை விபத்தில் சிக்கி 19.9.2025 அன்று உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இணையரான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் விஜயலட்சுமி, மகன் கார்த்திக், மருமகள் பிருந்தா ஆகியோர், கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சத்தை, மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமனிடம் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, ஆர்.கோமதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram