காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்
8 Apr 2026, 5:30 am

காங்கேயம் தொகுதியில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர், ஏப். 7- காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், காங்கேயம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொழிலாளர்களின் நலன் காக்கப்படும்.

இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான எனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.