தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால் சங்கரய்யா நகருக்கு குடிநீர் வசதி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

26 Sept 2026, 1:48 am
மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால் சங்கரய்யா நகருக்கு குடிநீர் வசதி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால் சங்கரய்யா நகருக்கு குடிநீர் வசதி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை,செப்.25-திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் அரசு வீடுகள் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக பட்டா வழங்கப்பட்டு, அங்கு 11 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அப்பகுதிக்கு சங்கரய்யா நகர் எனப்பெயரிடப்பட்டது.

ஆனால், அந்த குடும்ப ங்களுக்குத் தேவையான குடிநீர் வசதியில்லாமல், அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பெரணமல்லூர் வட்டாரக்குழு செயலாளர் பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன் மற்றும் இடைக்குழு உறுப்பினர் ஆகியோரின் தொடர் தலையீடு மற்றும் நிர்ப்பந்தங்கள் காரணமாக, பெரணமல்லூர் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில்

அப்பகுதியில் பொதுக் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது பழங்குடியின மக்கள் குடிநீர் கிடைக்கப் பெற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி முயற்சியால் தங்க ளின் அடிப்படை வசதி நிறைவேறியுள்ளது என, பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.