பட்டா வழங்கப்பட்ட பட்டியலினத்தவருக்கு பொட்டல்களம் குடியிருப்புகளை வழங்க வேண்டும் தேனி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
9 Jul 2026, 9:39 pm
<p><strong>பட்டா வழங்கப்பட்ட பட்டியலினத்தவருக்கு பொட்டல்களம் குடியிருப்புகளை வழங்க வேண்டும் தேனி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p><p>தேனி, ஜூலை 9- தேனி அல்லிநகரம் வரு வாய் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு பொட்டல்களத் தில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை இலவச மாக வழங்க வேண்டும் என தேனி ஆட்சியரை சந்தித்து, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கள் மனு அளித்தனர். தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.கண்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர், மாவட் டக் குழு உறுப்பினர் டி.நாக ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தேனி அல்லிநகரம் பொட்டல்களத் தில் தலித் பகுதி மக்களின் 2 சென்ட் இடத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி உத வியுடன் நகர்ப்புற மேம் பாட்டு வாரியத்தால் இரட்டை தரைதல குடியிருப்புகள் கொண்ட வீடுகள் கட்டி முடி ந்து கடந்த 6.2.2026-ல் திறக் கப்பட்டது. இன்று வரை பட்டா பயனாளிகளுக்கு இன்னும் வீடுகள் வழங்கப் படவில்லை என தெரிவித் துள்ளனர்.</p>
