ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை மீண்டும் திறந்திட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
12 Jul 2026, 9:22 pm

ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை மீண்டும் திறந்திட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை 12 - ஒதியத்தூர் கிராமத்தில் அமைக் கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை உடனடியாக மீண்டும் திறந்து வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை யும் சேலம் மாவட்ட நிர்வாகத்தை யும் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப் பதாவது: சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அம் பேத்கர் சிலை கால்மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது.

இதன் காரண மாக சிலையைத் திறப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளனர். இந்நிலையில் சிலை யைத் திறக்க வேண்டும் என்று வலி யுறுத்திய தலித் மக்களின் கோரிக் கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சிலையைத் திறந்து வைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சிலையை உடனடியாக மூட வேண்டும் என்று மீண்டும் பலமான எதிர்ப்பை தெரிவித்துள்ள னர். அவ்வாறு சாதிய மனப்பான்மை யுடன் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு சிலை திறந்து வைக்கப்பட்டிருப் பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிய மனநிலை யுடன் கூடியவர்களின் அழுத்தத் துக்கு அடிபணிந்து அண்ணல் அம் பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் அம் பேத்கர் சிலைக்கு இழைக்கப்பட்ட சாதிய ரீதியான இந்த அநீதிக்கு எதி ராக, உடனடியாக சிலையைத் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய தலித் மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியும் தலித் பகுதியைச் சேர்ந்த சிலரை கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒதி யத்தூர் அம்பேத்கர் சிலையை உட னடியாக திறந்து வைக்க வேண் டும்.

சட்ட விரோதமாக சிலையை மூடிய அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். மேலும் சாதிய மனநிலையோடு சிலையை திறப்ப தற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீதிக்காக போராடிய தற்காக கைது செய்யப்பட்டுள்ள வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலி யுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.