ஒடுவன்குப்பத்தில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
yesterday
<p><strong>ஒடுவன்குப்பத்தில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p><p>விழுப்புரம், நவ.17-விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒடுவன்குப்பம் கிராமத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும்ஓடை வாய்க்கால் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி (நவ.16) திங்கள் கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாளில், வட்ட செயலாளர் எஸ்.கணபதி தலைமையில்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த னர்.</p><p>அந்த மனுவில் ஒடுவன்குப்பம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய ஓடை வாய்க்கால் முழு மையாகஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் விவ சாயிகள் தங்கள் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல்தவிக்கிறார்கள். மழைக்காலத்தில் வயல்கள் மூழ்கி, பயிர்கள் மூழ்கி, அழியும் அபாயத்தின் அச்சத்துடன் உள்ளனர்.அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ள தாக தெரிவித்தனர்.இந்நிகழ்வின்போது, வட்ட துணைத் தலைவர் கே. வீரன், வட்ட பொருளாளர் எ.முருகானந்தம், டி. ராஜ கோபால்,முருகன் உட்பட பலர் உடனி ருந்தனர்.</p>
