குடிநீர் விநியோகம்: பிடி-விடம் சிபிஎம் வலியுறுத்தல்
11 Apr 2026, 5:30 am

குடிநீர் விநியோகம்: பிடி-விடம் சிபிஎம் வலியுறுத்தல்

வந்தவாசி அடுத்த காரம் மாதாயில் உள்ள குப்பம் கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிய கிணறு, ரூ.5 லட்சத்தில் பைப்லைன் மற்றும் ரூ.7.5 லட்சத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

எனவே, உடனடியாக குடிநீர் விநியோகத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் நிர்வாகிகள் அப்துல் காதர், பாசர் அசாபுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.