கட்டிய கனவு இல்லத்திற்கு நிதியினை விடுவிக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
27 Oct 2026, 11:27 pm

கட்டிய கனவு இல்லத்திற்கு நிதியினை விடுவிக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

அவிநாசி,அக்.27-அவிநாசி அருகே புதுப்பாளையம் செம்பியநல்லூர் கிராமப்புற பகுதிகளில் கனவு இல்லத்தில் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நிதி அளிக்காததால் கட்டுமானப் பணிகள் பாதியுடன் நின்றுள்ளது. தமிழக அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.தமிழக அரசால் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான ஒவ்வொரு பயனாளிக்கும் அரசு தரப்பிலிருந்து மூன்றரை லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை கட்டுமானப் பணிகளின் நிலைக்கு ஏற்ப பல தவணைகளாக நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், அவிநாசி ஒன்றியத்துக்கு செம்பியநல்லூர், புதுப்பாளையம் உட்பட்ட பல ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான அரசு ஆணை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை நம்பி வீடுகளை கட்ட ஆரம்பத்துள்ளனர். வீடுகள் கட்டும்போது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நேரில் வந்து

பார்த்துள்ளனர். ஆனால் மூன்று வகையான முறையில் தரப்படும் கனவு இல்லத்திற்கான நிதி உதவி தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால் கடன் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிற வீடுகளுக்கு நிதி உதவி கிடைக்காததால் மேற்கொண்டுவீடு கட்ட முடியாமலும் கட்டுவதற்கு பணம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் நிதி கேட்டு முதல்வரின் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் என மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனையடுத்து, உடனடியாக நிதி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக்குழுநிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுந்தரத்திடம் செவ்வாயன்று மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர் பழனிச்சாமி தலைமையில் பயனாளிகள் பங்கேற்றனர்.