கம்பம் அரசு மருத்துவமனைக்கு இருதய சிறப்பு மருத்துவர் நியமிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
30 May 2026, 9:41 pm
<p><strong>கம்பம் அரசு மருத்துவமனைக்கு இருதய சிறப்பு மருத்துவர் நியமிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p><p>தேனி, மே 30- கம்பம் அரசு மருத்துவ மனைக்கு இருதய சிறப்பு மருத்துவர் மற்றும் எக்கோ பரிசோதனை கருவி பொரு த்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. தேனியில் மருத்துவத் துறை இணை இயக்குநரை, கட்சியின் ஏரியா செயலா ளர் கே.ஆர்.லெனின், மாவட் டக்குழு உறுப்பினர்கள் வீ. மோகன், எஸ்.பன்னீர்வேல் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித் துள்ளதாவது: கம்பம் நகரம், கூடலூர் நகராட்சி, 2 பேரூராட்சி, 6 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், கேரள எல்லையோர மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது கம்பம் அரசு மருத்துவ மனை. இந்த மருத்துவ மனைக்கு சர்க்கரை, இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். நோயாளிகளை கவனிக்க சர்க்கரை மற்றும் இருதய சிறப்பு மருத்துவர் இல்லாத தால் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகிறார்கள். மேலும் இருதய நோயின் தன்மையை கண்ட றியும் எக்கோ பரிசோதனை கருவி இல்லாததால் தனி யார் மருத்துவமனைக்கோ அல்லது தேனி அரசு மருத்து வக் கல்லூரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. நெஞ்சுவலியால் கடுமை யாக பாதிக்கப்பட்ட நோயா ளிகள் அங்கு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே எக்கோ பரிசோதனை கருவியை பொருத்தவும், இருதய சிறப்பு மருத்துவரை நிய மிக்கவும் நடவடிக்கை எடுக்கும் படி அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.</p>
