ஏகாதிபத்திய எதிர்ப்பு - கியூப ஆதரவு இயக்கம்!
13 Jun 2026, 10:50 pm
<p><strong>ஏகாதிபத்திய எதிர்ப்பு - கியூப ஆதரவு இயக்கம்!</strong> </p><p>இன்று 5 இடங்களில் நடக்கிறது சென்னை, ஜூன் 13 - சோசலிச கியூபாவை நசுக்க அனைத்து வகை களிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி மேற் கொண்டு வருகிறது. அண்மைக் காலமாக, பொரு ளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை கியூபா விற்கு அமெரிக்கா கொடுத்து வருகிறது. எனினும், “கடைசி கியூபக் குடிமகனின், கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம், ஒரு போதும் சரணடைய மாட்டோம்” என அறிவித்து, கியூபா போராடி வருகிறது. இந்நிலையில், உலக ஏகாதிபத்திய எதிர்ப் பின் அடையாளமாய் மாறிப்போன மகத்தான புரட்சி யாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கியூப ஆதரவு இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி, தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு வடிவங்களில் கியூப ஆதரவு இயக்கம் நடைபெறுகிறது.</p>
