தவெக அரசாங்கம் மீதான இரு முனை விமர்சனம் - என்.குணசேகரன்
26 Sept 2026, 10:26 pm

தவெக அரசாங்கம் மீதான இரு முனை விமர்சனம் - என்.குணசேகரன்

தமிழக வெற்றிக் கழக அரசு நூறு நாட்களைத் தாண்டி இயங்கும்இந்தச் சூழலில், அதன் பொருளாதார நிர்வாகம், ஒன்றிய அரசுடனான அதன் உறவு ஆகிய இரண்டு முனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளது.

பொருளாதார அணுகுமுறை

ஆட்சிக்கு வந்தவுடனேயே “கஜானா காலியாக உள்ளது” என்ற குற்றச்சாட்டை முந்தைய திமுக அரசின் மீது சுமத்திய தவெக அரசாங்கம், ஒரு வெள்ளைஅறிக்கையை வெளியிட்டது. அரசின் தற்போதைய நிலை என்ன, ஏன் அந்நிலைஉருவானது என்பதை மட்டும் விளக்கும்அவ்வறிக்கையில், அதைச் சரிசெய்வதற்கான குறிப்பிட்ட செயல்திட்டம் இல்லை.இதன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டு முதல்முழு பட்ஜெட்டிலும் இதே போக்கு தொடர்ந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும்பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களுக்கான நீண்ட நாள் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.குறுகிய காலத்திலேயே ₹20,000 கோடி கூடுதல் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ₹10.98 லட்சம் கோடி மொத்தக் கடன் ஏற்கெனவே உள்ளது. இந்த நிலையில், பொதுச் செலவினங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான தெளிவான நிதிஆதாரம், எதிர்கால சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தெளிவான அணுகுமுறை இல்லை.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி (GSDP) 15.98% என சொல்லப்பட்டுள்ளது. அரசின் சொந்த வருவாய் வளர்ச்சி வெறும் 6.89% மட்டுமே என்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG)அறிக்கை எச்சரித்துள்ளது. வளர்ச்சிக்கும் வரி வசூலுக்கும் இடையேயான இந்த இடைவெளியை எப்படி நிர்வகிப்பது? பெருநிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோரிடமிருந்து முறையாக வரிகளை வசூலிப்பதற்கு அரசாங்கம் உறுதியான முயற்சிகளை மேற்கொள்கிறதா எனும் கேள்வி எழுகிறது.தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் சொந்தவரி மற்றும் வரி அல்லாத வருவாயைமேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட‘வருவாய் பெருக்குக் குழுவை’ அமைத்துள்ளது. மாண்டேக் சிங் அலுவாலியா இந்தியாவின் நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் முதன்மை வடிவமைப்பாளர்களில் ஒருவர்.

1991-ல் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் சந்தை சார்ந்த சீர்திருத்தங்களில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அரசு கட்டுப்பாடுகளைக் குறைத்து,தனியார் துறை மற்றும் உலகளாவிய சந்தை ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகளை இவர் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார்.மாண்டேக் சிங் அலுவாலியா குழுவின்பரிந்துரைகளை ஏற்பது மற்றும் செயல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் எதுவும்தமிழ்நாட்டு அரசாங்கத் தரப்பில் வெளிவரவில்லை. ஆனால், தற்போது வந்துள்ள அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் நவதாராளமயத்தை நோக்கியதாக அமைந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல!

தமிழ்நாடு அரசாங்கம் உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தனியார்மயமாக்கல், பொது-தனியார் பங்களிப்பு (PPP), அவுட்சோர்சிங், ஒப்பந்த வேலைகள்என நவதாராளமயக் கொள்கைகளைப் பல்வேறு துறைகளில் கொண்டுவருவது கடும் விமர்சனத்திற்குரியது.தமிழ்நாடு அரசு இந்தக் கொள்கைகளைப் பின்வருமாறு நடைமுறைப்படுத்தி வருவது மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல:

lஅரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெருமளவில் பொது-தனியார் பங்களிப்பு(PPP) மூலமாகத் திட்டமிடப்படுகின்றன.

l சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சாரப் பேருந்துகளைப் பொதுப் போக்குவரத்துத் துறையிடம் நேரடியாகவாங்காமல், தனியார் நிறுவனங்கள் மூலம்இயக்கி, பராமரிக்கும் PPP திட்டங்கள் கொண்டுவரப்படுவது.

l நெடுஞ்சாலைகள் மற்றும் ரிங் ரோடுகள்:சென்னை அவுட்டர் ரிங் ரோடு, பெரிஃபெரல் ரிங் ரோடு மற்றும் முக்கியத் தேசியநெடுஞ்சாலைப் பணிகளில் தனியார் முதலீடு; டோல் பிளாசா வசூல் உரிமைகளுடன் கூடிய PPP முறை அமலாக்கப்படுவது.

l கோயம்புத்தூர் மற்றும் அரியலூர் இடையே சுமார் ₹4,000 கோடி மதிப்பீட்டிலான மின்சாரப் பரிமாற்றக் காரிடார் மற்றும் மாநிலம் முழுவதும் மின் வாகனங்களுக்கான 20,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது.

l பொதுமக்களுக்கான அடிப்படைச் சேவைகளைத் தனியார் முகமைகள் வசம் ஒப்படைக்கும் போக்கு.

lதமிழ்நாட்டின் முக்கியப் பேருந்துநிலையங்களை மறுமேம்பாடு செய்து,வணிகவளாகங்களை அமைக்கும்உரிமைகளைத் தனியாருக்குத் தருவது போன்ற திட்டங்கள்.

l அரசுப் பணிகளில் நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக,ஒப்பந்த முறை அல்லது வெளிமுகமை (Outsourcing) முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது.

l மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் காலியாகும் தூய்மைப் பணியிடங்கள் நிரந்தரப் பணியாளர்களால் நிரப்பப்படாமல், சுயஉதவிக் குழுக்கள் அல்லது தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்தஅடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவது.

l அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள், கணினி இயக்குபவர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் பலஆண்டுகளாகத் தொகுப்பூதியம் மற்றும்தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்பட்டு வருவது.

l பொதுச் சேவைகளில் தனியார் பங்களிப்பு மற்றும் ஒப்பந்த முறைகள் அதிகரிப்பதால், அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி பாதிக்கப்படும் நிலை ஏற்படுவது.

l வேலைப் பாதுகாப்பின்மை, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி (PF),

மருத்துவக் காப்பீடு மற்றும் பணி நிரந்தர உத்தரவாதம் போன்ற அடிப்படைத் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலை.மேற்கண்ட அனைத்தின்மீதும் மார்க்சிஸ்ட் கட்சி தன்னுடைய எதிர்ப்பினைப் பதிவுசெய்து வந்துள்ளது.

ஒன்றிய அரசின் நிதி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு

தவெக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நீட், மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்டவற்றை கூட்டாட்சிக்கு எதிரானவை என விமர்சித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தில் உள்ள கட்சி என்கிற வகையில் அதன் அழுத்தம் போதுமானதாக இல்லை.முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே முதல்வர் விஜய் மேற்கொண்ட தில்லி பயணங்களின் தன்மையே இதற்குச் சான்று. பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து, நெடுஞ்சாலை, ரயில்வே, மெட்ரோ நிதி ஒதுக்கீடு கோரி மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால்,பொதுவெளியில் அழுத்தம் கொடுக்கும் வகையில் இல்லாமல் “கோரிக்கை மனு”வடிவிலேயே இந்த முயற்சிகள் இருந்தன.

நிதிப் பங்கீட்டில் நியாயமான பகிர்வு கோரி ஆகஸ்ட் 2026-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மிகவும் மென்மையாக — “சிறப்புச் சலுகைஎதுவும் கோரவில்லை, உரிய பங்கு மட்டுமே” கேட்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார். தமிழ்நாட்டிற்குஇழைக்கப்படும் அநீதிக்கு ஏற்ற பதிலா இது? தற்போது வசூலிக்கப்படும் வரியில்ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே தமிழ்நாடு திரும்பப் பெறுகிறது என்றநிலை எவ்வளவு பெரிய அநீதி! ஒன்றிய அரசின் வரி வருவாய்ப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கறாராகக் கோரிக்கை விடுக்கப்பட்டதை நிதியமைச்சர் மரியவில்சன் அறிவாரா?ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஈ.ஏ.எஸ்.சர்மா முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 270, 282 பிரிவுகளை ஒன்றிய அரசு எவ்வாறு துஷ்பிரயோகம் செய்து நிதி ஆணையத்தின் பங்கை சுருக்குகிறது என்று விவரித்திருந்தார். 2014-15ல் ₹3.38 லட்சம் கோடியாக இருந்த செஸ்/சர்சார்ஜ் வசூல்2025-26ல் ₹14.22 லட்சம் கோடியாகஉயர்ந்திருப்பதை அவர் எடுத்துக்காட்டினார்.

ஒன்றிய அரசு செஸ் (Cess) மற்றும் சர்சார்ஜ் (Surcharge) வரிகளைத் தீவிரமாக உயர்த்தி மாநிலங்களின் நிதி உரிமைகளைப் பறித்து வருகிறது. அரசு செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலம் திரட்டும் வருவாயையும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் ‘வரித் தொகுப்பிற்குள்’ (Divisible Pool) கொண்டுவர வேண்டும். அரசியலமைப்பின் 270 மற்றும் 282 ஆகிய

பிரிவுகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து நிதி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியான போராட்டங்களும் நடந்து வருகின்றன.மாநிலக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நிதி மசோதாக்கள் மீதான விவா

தங்களின் போது செஸ்/சர்சார்ஜ் முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்துள்ளனர்.

மாநில உரிமைகளுக்காகவும், கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் நிதிப் பகிர்வு விவகாரத்தில் ஒரு மாநில

முதல்வர் தில்லியில் திரண்டு போராட்டம் நடத்தியது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வு.மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்குத் தேவையான நிதி எவ்வாறு ஒன்றிய அரசால் சுருக்கப்படுகிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து அரசியல் ரீதியான விவாதங்களை உருவாக்குவதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிற்கிறது. ஆனால் தவெகவினர் உரிய அக்கறை காட்டவில்லை.

இது போன்ற நிதித் தாக்குதல்களை எதிர்கொள்ள, கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது அக்கறை கொண்ட அனைத்து மாநில

அரசுகளும், அரசியல் இயக்கங்களும் ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்

படுத்துவது அவசியம்.இது போன்ற ஒன்றிய அரசின் நிதிஉரிமைப் பறிப்பு தாக்குதலுக்கு எதிராகத்தவெக அரசாங்கம் இதுவரை உறுதியான, தொடர்ச்சியான எதிர்ப்பை முன்னெடுக்கவில்லை.

தவெக அரசாங்கத்தின் இந்த இரு வெளிப்பாடுகளை உழைக்கும் வர்க்கக் கட்சி என்ற வகையில் மார்க்சிஸ்ட் கட்சிவிமர்சிக்கிறது. அதிகாரத்தை நிர்வகிப்பதில் தவெக அரசாங்கம், தமிழ்நாட்டின் தேவைகளை மையப்படுத்தி, உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல், குறுகிய கால அரசியல் இலாபம் பெறுவதில் கவனம் செலுத்துகிறது.பொருளாதார நிர்வாகத்திலும், ஒன்றியஅரசுடனான உறவிலும் இப்படிப்பட்ட அணுகுமுறை தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப் பயன்படாது என்பதில் மார்க்சிஸ்ட்கட்சி உறுதியாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தில் நிகழ்த்தப்படுகிற சீர்கேடுகளை விமர்சித்துப் போராடுவதற்கும் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது அவசியம்.