தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆளுநர் ஆட்சியை தடுக்க தவெகவுக்கு ஆதரவு: திமுகவுடன் உறவு தொடரும்! செய்தியாளர்களுக்கு பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டி

9 May 2026, 12:19 am
ஆளுநர் ஆட்சியை தடுக்க தவெகவுக்கு ஆதரவு: திமுகவுடன் உறவு தொடரும்! செய்தியாளர்களுக்கு பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டி

ஆளுநர் ஆட்சியை தடுக்க தவெகவுக்கு ஆதரவு: திமுகவுடன் உறவு தொடரும்! செய்தியாளர்களுக்கு பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டி

சென்னை, மே 8 - தமிழகத்தில் ஆளுநர் மூலமாக கொல்லைப்புற வழியில் ஆட்சியமைக்க துடிக்கும் பாஜக-வின் முயற்சியை முறி யடிப்பதற்காகவும், இன்னொரு தேர்தலை தவிர்ப்பதற்காகவும் தவெக-வுக்கு ஆதரவளிப்பதாகவும், அதேநேரம் திமுக உடனான உறவு தொடரும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன.

தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அதுதொடர்பாக, ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி களின் மாநிலக்குழு கூட்டங்கள் வெள்ளிக் கிழமையன்று சென்னையில் தனித்தனி யாக நடைபெற்றன.

இவற்றின் முடிவில், இரு கட்சிகளின் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகி யோர் தோழர் பி. ராமமூர்த்தி நினைவ கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, தமிழகத்தை ஆளுநர் மூலமாக குறுக்கு வழியில் ஆட்சி செய்ய துடிக்கும் பாஜகவின் முயற்சியை முறி யடிக்க வேண்டியதன் அடிப்படையில், தவெக ஆட்சியமைக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிப்பதென முடி வெடுத்துள்ளதாக அறிவித்தனர்.

ஒரே மாதிரியான முடிவு: பெ. சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறு கையில், “இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரி யான முடிவை எடுத்திருக்கின்றன.

நடை பெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அதிகாரம் கிடைக்கவில்லை.

எந்த ஒரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலை யில் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அமைய வேண்டியது அவசியம்.

அதுவும் மே 10-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்கிற நெருக்கடியான நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. ஆளுநரின் நட வடிக்கை சட்டத்திற்கும் ஜனநாய கத்திற்கும் விரோதமானது. த

னிப்பெரும் கட்சி என்கிற முறையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்ப தற்கு தமிழ்நாட்டின் ஆளுநர் முறை யாக அனுமதித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றும், எண்ணிக்கையை கொடுத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என்றும் ஆளுநர் சொல்லியிருப்பது சட்டத்திற்கு விரோத மானது.

பாஜகவின் நோக்கம் முறியடிக்க வேண்டும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முற்றிலும் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் பாஜகவால் வெற்றி பெற முடிந்துள்ளது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்துவது என்கிற நோக்கத்துடன் தான் ஒன்றிய பாஜக இத்தகைய முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

கொல்லைப்புறம் வழியாக ஆட்சி நடத்தும் பாஜகவின் இந்த நோக்கத்தை முறியடிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம். அதே நேரத்தில், அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்.

வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று தான் இரண்டு கட்சிகளும் முடிவு செய்திருக் கின்றன.

இன்னொரு தேர்தலை தவிர்ப்ப தற்காகவும் ஆளுநர் ஆட்சி வருவதை தடுப்பதற்காகவும் தற்போதைக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு என்பதை தவிர வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதை உணர்ந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக் குழுக்களும் இந்த முடிவை எடுத்திருக்கின்றன” என்று தெரிவித்தார்.

மு. வீரபாண்டியன் விளக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற இடங்கள், வாக்குகள் அனைத்தும் செய்தியாளர்களும் தமி ழக மக்களும் அறிந்ததுதான். த

மிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக மக்கள் தனித்த பெரும்பான்மையை வழங்கி யிருக்கிறார்கள்.

ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டமன்ற உறுப்பி னர்களின் ஆதரவு தேவைப்படுவதால், அந்தக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி களை அணுகி ஆதரவு கோரியது. அ

தைத் தொடர்ந்து நாங்களும் மாநில செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசி ஒரு முடிவை எடுத்து அறிவித்திருக்கிறோம்.

இதன் சாரம் என்னவென்றால், தமிழக மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எடுக்கக் கூடிய நிலைப்பாட்டை தாமும் ஆதரிப் பேன் என்று ஏற்கனவே செய்தியாளர் களிடம் திருமாவளவன் தெரிவித்திருக் கிறார் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

“ஆதரவு என்பது கூட்டணி அல்ல; மக்கள் தீர்ப்புக்கு மரியாதை”

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இரு தலைவர்களும் பதிலளிக்கையில், “இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

ஆகவே, ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு திமுகவிற்கு இல்லை.

தற்போதைக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரே கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே இருக்கிறது.

ஆளுநர் ஆட்சி வராமல் தடுப்பது, கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆட்சி நடத்துவதை அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையிலும் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதே நேரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கொள்கைகளை முன்னெடுப்பது, மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகிய வற்றில் திமுகவுடன் இணைந்து நாங்களும் பய ணித்தோம்.

வருங்காலத்திலும் மதவெறி சக்தி களுக்கு எதிராகவும், ஒன்றிய பாஜக அரசாங்கம் மாநில உரிமைகளை பறிக்கும்போதும் திமுகவுடன் இணை ந்து மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக சேர்ந்து போராடுவோம்.

திமுகவுடனான எங்கள் உறவு தொடரும். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுத்திருக்கும் இந்த முடிவில் எவ்வகையிலும் குழப்பம் கிடையாது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு இரு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வெளியி லிருந்து மட்டுமே அளிக்கின்றன.

அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். மாநில நலன் சார்ந்த பிரச்சனைகளில், ஒற்றுமையான கருத்துள்ள பிரச்சினைகளில் திமுகவுடன் சேர்ந்து பயணிப்போம். தமிழக வெற்றிக் கழக தலைவருக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொடுப்பது ஆதரவு மட்டுமே.

அது கூட்டணி அல்ல.

கூட்டணி என்றால் குறைந்தபட்சம் ஒரு செயல்திட்டம், நாட்டு நலன் சார்ந்த சில திட்டங்கள் இவை அனைத்தையும் முன்மொழிந்து கூட்டணி அமையும்.

அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல் குறித்து அந்நேரத்தில் பேசுவோம்.

இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று எடுக்கப்பட்டிருக்கிற முடிவை மட்டுமே தங்களிடம் தெரிவிக்கிறோம்.

திமுக தலைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த இடத்தி லும் கூறவில்லை. விஜய் ஆட்சி அமைக்கட்டும், நாங்கள் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று தான் திமுக தலைவர் அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு வெளியில் ஆதரிப்பது என்பது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனிப்பட்ட முறையில் எடுத்த கொள்கை முடிவு. திமுகவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் திமுகவிடம் ஒப்புதல் அல்லது அனுமதி கேட்கும் பிரச்சனையே எழவில்லை.

மக்கள் தீர்ப்பிற்கு மரியாதை இப்போது தமிழ்நாட்டில் அமையவிருக்கும் அர சாங்கம் மக்கள் நலம் சார்ந்ததாக செயல்பட வேண்டும்.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்களித்திருக் கிறார்கள். ஆட்சி அமைப்பதற்கான போதிய எண்ணிக்கை தவெகவிடம் இல்லை.

அதனால் எங்க ளிடம் ஆதரவு கேட்கிறார்கள். மக்கள் அளித்த அந்தத் தீர்ப்பை நாங்கள் வழிமொழிகிறோம்.

இடதுசாரி களால் தான் ஆட்சி அமைக்க முடியவில்லை என்கிற ஜனநாயக விரோத சொல் வந்துவிடக்கூடாது.

இந்தத் தேர்தல் முடிவு மக்கள் அளித்த தீர்ப்பு. இருக்கும் கட்சிகளில் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் தான் அதிக இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

அவர்களுக்கு மட்டுமே அரசு அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வாய்ப்பு இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளால் தடை பட்டுவிட்டது என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

நாங்கள் எடுத்திருப்பது ஜனநாயகபூர்வமான முடிவு. ஜனநாயக முடிவு சிதைந்தால் உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆட்சி நடைபெறும்.

அது ஏற்கத்தக்கதல்ல. எனவே மக்கள் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பளித்து அரசியல் முன்மொழிவு செய்திருக்கிறோம்.

வேறு ஒன்றும் இல்லை.

உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து நாங்கள் அனைவரும் பேசியிருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இனி வரும் காலங்களில் தமிழகத்தின் உரிமை களுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும்.

ஜனநாய கத்திற்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும். மதச்சார்பி ன்மையை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் உறுதுணையாக இருப்போம்.

திமுகவுடன் பயணம் தொடரும் தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு என்பது வேறு, கூட்டணி உடன்பாடு என்பது வேறு.

திமுகவுடன் நாங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகால பயணம் மேற்கொண்டதற்கு காரணம், ஒன்றிய பாஜக அரசின் மதவாத அரசியலுக்கு எதிராகவும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து பயணித்தோம். இப்போதும் அந்தப் பயணத்தை நாங்கள் தொடர்வோம்.

வேறு சில ஜனநாயக கட்சிகளும் உடன் வந்தால் அவர்களுடனும் இந்தக் கொள்கைக்காக சேர்ந்து போராடுவோம்.

இது நாடு காக்கும் போராட்டம். மதச்சார்பற்ற கொள்கை கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் தமிழக வெற்றிக் கழகம் எங்களிடம் ஆதரவு கேட்டது.

அந்த முறையில் நாங்களும் ஆதரவு கொடுத்திருக்கிறோம்.

இவ்வாறு இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.